அரசாங்கத்தின் தீர்மானம்! மருத்துவத்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி
அரசு ஊழியர்களுக்கு 60 வயதிலேயே ஓய்வு அளிக்கும் அரசாங்கத்தின் தீர்மானம் காரணமாக, தற்போதுள்ள இருதய மற்றும் மார்பக அறுவை சிகிச்சை நிபுணர்கள் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நாட்டின் சுகாதார சேவையில் தற்போது 27 இருதய மற்றும் மார்பக சத்திரசிகிச்சை நிபுணர்கள் தேவைப்படுகின்ற போதிலும், 18 வைத்தியர்கள் மாத்திரமே அந்த சேவைகளை வழங்கவுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஓய்வு பெறும் மருத்துவர்கள்
இவர்கள் தற்போது கொழும்பு, கண்டி, காலி, யாழ்ப்பாணம் மற்றும் லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் கடமையாற்றி வருகின்றனர். இதில் மூன்று வைத்தியர்கள் இந்த வருடம் ஓய்வுபெறவுள்ள நிலையில் மேலும் நால்வர் அடுத்த வருடம் ஓய்வுபெற உள்ளனர்.
மேலும் ஒரு வைத்தியர் வெளிநாடு செல்ல தயாராகி வருவதாகவும் இதனால் இந்நாட்டில் 10 விசேட வைத்தியர்களே எஞ்சியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் நோயாளிகள்
அடுத்த 5 ஆண்டுகளில் 60 வயது நிறைவடையவுள்ளதால் அவர்களும் ஓய்வு பெறப்போவதாகக் குறிப்பிடப்படுகிறது.

தற்போது இதய அறுவை சிகிச்சைக்காக நோயாளிகள் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருப்புப் பட்டியலில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது, மேலும் மருத்துவர்கள் பற்றாக்குறையால் எதிர்காலத்தில் நிலைமை மோசமாகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam