இலங்கையின் முக்கிய இராஜதந்திரி ஒருவர் மீது பாலியல் குற்றச்சாட்டு
இலங்கையின் முக்கிய இராஜதந்திரி ஒருவர் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
மேற்குலக நாடு ஒன்றின் கொன்சோல் ஜெனரலாக கடமையாற்றி வரும் பலம்பொருந்திய இராஜதந்திரி ஒருவருக்கு எதிராகவே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த அரசாங்க ஆட்சியில் தொடர்பாடல் விவகாரங்களுக்கு இந்த இராஜதந்திரி பொறுப்பாக இருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.
இராஜதந்திர அலுவலகத்தில் கடமையாற்றிய பெண் பணியாளர்கள் இந்த பாலியல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர்.
குறித்த இராஜதந்திரி ஓர் மிருகம் என பெண் பணியாளர் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார். பணியாளர்களை மிக இழிவாக திட்டுவதாகவும் தரக்குறைவாக நடாத்துவதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
மேற்குலக நாட்டின் ஊடாகவும் இராஜதந்திரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் முனைப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டு தொடர்பில் அரசாங்கத் தரப்பில் அதிகாரபூர்வமாக எவ்வித
பதிலும் இதுவரையில் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





siragadikka aasai: படுமோசமான முத்து.. யாரும் எதிர்பார்க்காத திருப்பம்- பேரானந்தத்தில் விஜயா Manithan

மனோஜை துடைப்பக்கட்டையால் ரவுண்டு கட்டி அடித்த பெண்கள், அப்படி என்ன செய்தார்.. சிறகடிக்க ஆசை கலகலப்பு புரொமோ Cineulagam

விஜய்யின் ‘குஷி’ ரீரிலீஸ் தியேட்டர் எல்லாம் காத்து வாங்குதா.. பிரபல தியேட்டர் உரிமையாளர் ட்ரோலுக்கு பதில் Cineulagam
