சமுர்த்திக்காக 50000 மில்லியனை செலவிடும் அரசு - ஷேயான் சேமசிங்க
நாட்டில் குறைந்த வருமானத்தை பெறும் மக்களின் பொருளாதார நிலைமையை மேம்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் என ராஜாங்க அமைச்சர் ஷேயான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
குறைந்த வருமானத்தை பெறும் மக்களுக்கு ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டம் சமுர்த்தி திணைக்களத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் நிகழ்ச்சி ஒன்றின் போது செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாடு முழுவதும் 500 உற்பத்தி கிராமங்கள் ஊடக 40 ஆயிரம் உற்பத்தி குடும்பங்களை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம்.
சமுர்த்தி திட்டத்திற்காக வருடாந்தம் அரசாங்கம் 50 ஆயிரம் மில்லியன் ரூபாவை செலவிடுகிறது.
மக்களின் நலன்புரி வேலைத்திட்டங்களை தவிர்க்க கொரோனா தொற்று நோயை காரணமாக்கி கொள்ளவில்லை எனவும் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.