சீனாவின் கழிவை பசளையாக்க முயற்சிக்கும் அரசாங்கம்:ஐ.மக்கள் சக்தி
சீனாவின் பசளை கப்பலை நிராகரிக்கும் அளவுக்கு கூட அரசாங்கத்திற்கு முதுகெலும்பில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி (Chaminda Wijesiri) தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அந்த கப்பலில் இருக்கும் மலக்கழிவுவை பசளையாக மாற்றவே அரசாங்கம் முயற்சித்து வருகிறது.
நிராகரிக்கப்பட்ட பசளை கப்பலை அரசாங்கம் நிராகரிக்காமல் இருப்பதற்கு காரணம் அதன் ஊடாக கிடைக்கும் தரகு பணம். கமத்தொழில் அமைச்சர் ஊடகங்களுக்கு எதிரில் வந்து பேசுவதை பார்த்தால், அந்த மலக்கழிவுகள் அடங்கிய கப்பலை அரசாங்கம் நிராகரிக்காது.
அத்துடன் மக்கள் பற்றி எண்ணும் அளவுக்கு அமைச்சர்கள் எவருக்கும் அறிவில்லை எனவும் சமிந்த விஜேசிறி குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri