அரச ஊழியர்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் அதிரடி உத்தரவு
தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடாமல் கடமைக்கு சமுகம் அளித்த அரசாங்க ஊழியர்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
நாடாளவிய ரீதியில் கடந்த இரண்டு நாட்களாக அரசாங்க ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் அதனை தவிர்த்து கடமைக்கு சமூகமளித்த, நிறைவேற்று தரத்திற்கு உள்ளடங்காத அரசாங்க அதிகாரிகளுக்கு விசேட சம்பள உயர்வு, எதிர்கால பதவி உயர்வு மற்றும் விசேட பாராட்டுச் சான்றிதழ் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
விசேட சம்பள உயர்வு
ஜனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இதற்கான அனுமதி வழங்கப்பட்டது.

இது தொடர்பில் அனைத்து அமைச்சின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் மாகாண பிரதம செயலாளர்களுக்கு அறிவித்து அது தொடர்பான சுற்றறிக்கைகளை வெளியிடுமாறு பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பணிப்புரை விடுத்துள்ளார்.
இலங்கை அருகே... ஈரான் கப்பல் மீது நீர்மூழ்கியால் தாக்குதல் நடத்தியதை அறிவித்த அமெரிக்கா News Lankasri
சிந்தாமணியால் சிக்கலில் சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
காமெனியின் படுகொலை... உலகம் மொத்தம் பீதியை ஏற்படுத்திய ஈரானிய மூத்த மதகுருவின் அழைப்பு News Lankasri
போலீசாரால் கைது செய்யப்பட்ட பல்லவன், ஷாக்கில் சகோதரர்கள்... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam