நீரிழிவு மருந்துகளுக்காக பெருந்தொகை பணம் செலவிட்ட அரசாங்கம்
நீரிழிவு தொடர்பில் இன்சுலின் உட்பட்ட மருந்துகளுக்காக, கடந்த ஆண்டு சுமார் 7.3 பில்லியன் ரூபாய்களை அரசாங்கம் செலவிட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த செலவு அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்;துள்ளார்.
விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி
இந்தநிலையில், மருத்துவத்திற்காக திறைசேரியின் நிதியை மட்டுமே நம்புவதற்குப் பதிலாக, நோய்த் தடுப்புக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்

காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் இடம்பெற்ற நிகழவு ஒன்றில் அவர் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.
பொதுமக்கள் மருத்துவத்திற்கு அப்பால் செல்ல வேண்டும் என்றும், இதில் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியின் பங்கையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் தற்போது 16 விளையாட்டு மருத்துவப் பிரிவுகள் உள்ளன, ஆனால் சில மாகாணங்களில் இன்னும் அத்தகைய வசதிகள் இல்லை என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரீமேக் செய்யப்படும் விஜய் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல்.. அதில் யார் ஹீரோவாக நடிக்கிறார் தெரியுமா? Cineulagam