இலங்கையில் பணியாற்றுவோருக்கு அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கை
இலங்கையில் சுற்றாடலுடன் இணைந்ததாக போக்குவரத்து வழிமுறைகளை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக சைக்கிள் பாவனையை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அமைச்சரவைப் பத்திரம் ஒன்று ததயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
அனைத்து ஊழியர்களையும் சைக்கிள் மூலம் பணியிடங்களுக்கு செல்லுவதற்கு ஊக்குவிக்கப்படவுள்ளனர். சைக்கிள் ஓட்டுவதற்காக ஒவ்வொரு வீதியிலும் ஒரு மருங்கை ஒதுக்குவதுடன், சுற்றாடல் அமைச்சுடன் இணைந்த நிறுவனங்களில் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு சில ஊக்குவிப்பு சலுகைகளை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசல் உள்ள போது பயணிக்கும் ஒரு வாகனத்தில் கிலோமீட்டருக்கு 103.56 ரூபாவை அரசாங்கம் செலவிட வேண்டியுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சைக்கிள் பாவனையினால் காற்று மாசுபாட்டை குறைத்தல், நேர விரயத்தை தடுத்தல் போன்று தொற்றாத பல நோய்களை கட்டுப்படுத்த காணப்படும் வாய்ப்புகள் காரணமாக சைக்கிள் பாவனையை ஊக்குவிப்பதற்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த அணுகுமுறையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்த திட்டத்தை ஏனைய அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கத்தின் உதவியை நாடவுள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

விருது வாங்க சென்ற இடத்தில் அஜித் மகனுக்கு அடித்த லக்.. குடியரசு தலைவருடன் லீக்கான புகைப்படம் Manithan
