இலங்கையில் மக்களின் கண்ணுக்கு தெரியாத பெரும் ஆபத்து (Video)
வற் வரி அதிகரிப்பை விட வரி விலக்கிற்கு உட்பட்டிருந்த பொருட்கள் மீதான வரி அறவீடே மக்களை பெருமளவில் பாதிக்கும் என கொழும்பு பல்கலைக்கழக பொருளியல் துறை பேராசிரியர் கோபாலபிள்ளை அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த வற் வரி அதிகரிப்பில் மக்கள் பெருமளவு பிரச்சினைகளை எதிர்நோக்க இருக்கிறார்கள்.
அதுமட்டுமன்றி, இதுவரை காலமும் வரி விலக்கிற்கு உட்பட்டிருந்த பொருட்கள் அனைத்திற்கும் ஜனவரி மாதம் முதல் வரி அறவிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
வற் வரி அதிகரிப்பை விட அரசாங்கத்தின் இந்த தீர்மானமே மக்களை அதிகமாக பாதிக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |