போக்குவரத்து கட்டணங்களை தீர்மானிக்கும் அதிகாரத்தில் மாற்றம்
போக்குவரத்துத் துறை தொடர்பான கட்டணங்கள் தொடர்பில் தீர்மானிக்கும் அதிகாரத்தை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த சட்டத்தை மாற்றுவதற்கு உரிய ஆவணங்கள் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இன்று (02.01.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
நியாயமான விலைக் கொள்கை
புகையிரத, முச்சக்கர வண்டி மற்றும் பாடசாலை போக்குவரத்து சேவைக் கட்டணங்கள் உட்பட அனைத்தும் இதற்குள் உள்வாங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு கவலையளிக்கும் செய்தி : அரசாங்கத்தின் தீர்மானத்தால் பாரிய சிக்கலில் நகர்ப்புற மக்கள்
அதன்படி, போக்குவரத்துத் துறை தொடர்பான கட்டணங்கள் குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு வழங்குமாறு அமைச்சரவை பத்திரம் ஒன்றை நேற்று வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதன்மூலம் நியாயமான விலைக் கொள்கையை அங்கு உருவாக்க முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 நாட்கள் முன்

தென்னிந்தியாவில் முதன்முறையாக புதிய சாதனை படைத்த விஜய்யின் மதுரை TVK மாநாடு வீடியோ... குஷியில் ரசிகர்கள் Cineulagam

நயன்தாராவுடன் தனது முதல் படத்தில் நடித்துள்ள மகாநதி சீரியல் நடிகர்.. அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam

இந்த 3 சூழ்நிலைகள்... இந்தியாவிற்கு எதிராக மீண்டும் அணு ஆயுத மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் News Lankasri
