ரணிலுக்கு சவாலாக மாறி வரும் படலந்த விவகாரம்
படலந்த ஆணைக்குழு அறிக்கையை இந்த வாரத்திற்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்க இன்று (15) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்ட விடயம் தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரவை முடிவு
இதன்போது, அமைச்சர், ஆணைக்குழுவின் அறிக்கையை இந்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது ஜனாதிபதியும் அமைச்சரவையும் இந்த விடயத்தில் மிகுந்த கவனம் செலுத்தியதாக அமைச்சர் கூறினார்.
இதற்கமைய, படலந்த ஆணைக்குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் இது தொடர்பாக மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |