இராஜினாமா கடிதத்தை கையளித்த தயாசிறி ஜயசேகர (Photos)
பத்திக், கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
அவர் தமது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இலங்கை அரசியல் ரீதியாக கடுமையான அராஜகத்தை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாகவும், பொருளாதார ரீதியாக வங்குரோத்து நாடாக மாறியுள்ளது என அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டதாவது,
எரிசக்தி பற்றாக்குறை மற்றும் அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் தட்டுப்பாட்டினால், நகர்ப்புற-கிராமப்புற மற்றும் தோட்டப்புற ஏழைகள் மட்டுமல்ல, பணக்கார குடிமக்களும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இவ்வாறான நிலையில், அரசாங்கப் பொறுப்புகள் அல்லது பதவிகளை தொடர்ந்தும் வகிப்பதற்கு தார்மீக ரீதியாக கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
69 இலட்சம் வாக்காளர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற இந்த அரசாங்கம் தவறியுள்ளதாக ஜனாதிபதிக்கு எழுதியுள்ள நீண்ட கடிதத்தில் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாடு வரலாறு காணாத பொருளாதார அதல பாதாளத்தில் வீழ்ந்துள்ளதாகவும், இந்த பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் போது எந்தவொரு வெளிநாட்டு நாடும் பல்வேறு பூகோள அரசியல் நலன்களுக்கு இணங்க செயற்படுவதற்கும் கூட வாய்ப்புகள் இருப்பதாகவும் ஜனாதிபதியிடம் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில் தொடர்ந்தும் இராஜாங்க அமைச்சர் பதவியை வகிக்க மனசாட்சி இடமளிக்காது என ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் அவர் வலியுறுத்தியுள்ளார்.


நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் மாலை திருவிழா




