1775 டபில் கெப் கொள்வனவு செய்வதற்காக அரசாங்கம் கோரியுள்ள கேள்விப்பத்திரம்
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சு, டீசல் மூலம் இயங்கும் 1775 டபில் கெப் கொள்வனவு செய்வதற்கான, பல பில்லியன் ரூபாய் கேள்விப்பத்திரத்தை வெளியிட்டது.
ஆர்வமுள்ள தரப்பினர் தங்கள் ஏலங்களை சமர்ப்பிக்க வெறும் 12 நாட்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
எனினும், ஏன் குறுகிய காலத்துக்குள் கேள்வி பத்திரம் நிறைவுத்தப்படுகிறது என்பது தொடர்பான விளக்கம் இதுவரை வெளியாகவில்லை என்று ஊடகம் ஒன்று கூறுகிறது.
தேசிய போட்டி
புதிய நான்கு சக்கர தானியங்கி டிரான்ஸ்மிசன் டீசல் டபில் கெப் வாகனங்களை வாங்குவதற்கு தேசிய போட்டி ஏலம் அழைக்கப்பட்டுள்ளது.

ஆர்வமுள்ள ஏலதாரர்கள் 2025 ஒக்டோபர் 23 மற்றும் 2005 நவம்பர் 3ஆம் திகதிக்கு இடையில் ஏல ஆவணங்களை பெற்றுக்கொள்ள முடியும் அத்துடன், 2025 நவம்பர் 4ஆம் திகதி அன்று பிற்பகல் 2 மணிக்கு முன்னர் தமது ஏல விண்ணங்களை சமர்ப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தானியங்கி டிரான்ஸ்மிசன் டபில் கெப் ஒன்றின் தற்போதைய விற்பனை விலை 23 மில்லியன் முதல் 24.7 மில்லியன் வரையானது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களை "விரைவாகவும் திறமையாகவும்" செயல்படுத்துவதற்கு வசதியாக புதிய இரட்டை வாகனங்களை கொள்வனவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
பிக்பாஸ் 9 சீசன் Wild Cardல் என்ட்ரி கொடுக்கப்போகும் பிரபல சன் டிவி நடிகை... யாரு தெரியுமா? Cineulagam
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri