வறிய மக்களுக்கு இலவச அரிசி வழங்கும் ரணில் அரசு
புத்தாண்டை முன்னிட்டு 27.5 லட்சம் வறிய குடும்பங்களுக்கு தலா 20 கிலோ அரிசி வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அஸ்வெசும அல்லது ஏனைய உதவிகளை பெறாதவர்களுக்கே இந்த உதவி வழங்கப்படவுள்ளது.
பிராந்திய அபிவிருத்திக்காக நிதியமைச்சினால் 20 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிராமிய அபிவிருத்திகள்
அனுராதபுரம், களுஆராச்சியாகம பிரதேசத்தில் இடம்பெற்ற எதிர்கால கிராமிய அபிவிருத்திகள் தொடர்பில் மக்கள் விழிப்புணர்வூட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நிவாரண உதவித் திட்டத்தின் கீழ் ஜூலை மாதத்திற்குள் 24 லட்சம் குடும்பங்களுக்கு நன்மைகள் வழங்கப்படும் என்றும் ராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 14 மணி நேரம் முன்
விஜய் டிவியில் புதிதாக வரும் 'தாய் மாமன்' சீரியல்.. ஒளிபரப்பாகும் நேரம், நாள் தெரியுமா.. இதோ வீடியோ Cineulagam