பத்திரிகை போன்று பணம் அச்சிடும் அரசாங்கம் – ரணில்
இந்த அரசாங்கம் பத்திரிகைகளை அச்சிடுவது போன்று பணத்தை அச்சிட்டு வருவதாக முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
பொரளையில் இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த அரசாங்கம் தொடர்பில் இளைஞர்,யுவதிகள் கொண்டிருந்த நம்பிக்கை சிதறடிக்கச் செய்யப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த அரசாங்கத்திற்கு வருமானம் இல்லாத காரணத்தினால் பணத்தை பத்திரிகை அச்சிடுவது போன்று அச்சிட்டு வருகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமது அரசாங்கத்தை விமர்சனம் செய்த போதிலும் தமது அரசாங்கம் பொருளாதாரத்தை கட்டியெழுப்பியது என அவர் தெரிவித்துள்ளார்.
பொருட்களின் விலைகள் பாரியளவில் உயர்வடைந்துள்ளது எனவும், இந்த ஆண்டு நிறைவில் இன்னமும் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்படக் கூடிய சாத்தியம் உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாக்களித்த மக்களின் நம்பிக்கை வீணாகியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் ராணுவ தளங்களை தாக்கிய இந்திய விமானப்படை: BrahMos பயன்படுத்தப்பட்டிருக்க வாய்ப்பு News Lankasri

இனியா செய்த விஷயம்.. ஷாக் ஆன வில்லன்! நம்பர் 1 ட்ரெண்டிங்கில் பாக்கியலட்சுமி அடுத்த வார ப்ரோமோ Cineulagam
