ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு கடும் சவால் - நெருக்கடியை எதிர்கொள்ள தயாராகும் அரசாங்கம்
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 46வது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது.
இலங்கையின் தற்போதைய மனித உரிமைகள் சம்பந்தமான விடயங்கள் இந்த அமர்வில் கலந்துரையாடப்படவுள்ளன. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட்டினால் தயாரிக்கப்பட்டுள்ள விசேட அறிக்கையொன்று இரண்டாம் நாளன்று முன்வைக்கப்படவுள்ளது.
இந்த அறிக்கை ஏற்கெனவே இலங்கை அரசாங்கத்திடம் ஒப்பிடைக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் வரும் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள அரசாங்கம் தயார் நிலையிலுள்ளது.
இலங்கை நடுநிலையான அணிசேரா வெளிநாட்டுக் கொள்கையின் அடிப்படையில் செயற்படும் நாடாகுமென வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை என்பது ஜனநாயகப் பாதையில் பயணிக்கும் ஒரு நாடாகும். எந்தப் பிரச்சினை வந்தாலும் அதற்கு தீர்வைப் பெற்றுக் கொள்ளும் வல்லமை அரசாங்கத்திடம் இருப்பதாக அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.




