தமிழர்களுக்கு எதிராக அரசாங்கம் திட்டமிட்ட சதி: கூட்டமைப்பின் எம்.பி பகிரங்கம் - செய்திகளின் தொகுப்பு
சுதந்திரத்துக்காகப் போராடி உயிர் நீர்த்த ஒவ்வொரு போராளிகளை, தமிழ்த் தேசிய வீரர்களை, மாவீரர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்த எங்களுக்கு உரிமையுண்டு. அதற்கு உங்களால் தடைபோட முடியாது. தடைபோடவும் கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வினோநோகராலிங்கம் (Vino Noharathalingam) தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் அடுத்த வருடத்திற்கான பாதீட்டின், இரண்டாம் மீதான வாசிப்பு 6ஆம் நாள் விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய அவர், அரசாங்கம் திட்டமிட்ட வகையில் தமிழர்களின் நினைவுகூரல் நிகழ்வுகளுக்குத் தடை விதிப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
“இனத்துக்காக உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூரத் தயாராயுள்ள நிலையிலே வடக்கு கிழக்கிலே உள்ள நீதிமன்றங்கள் அந்தந்த மாகாணங்களில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், தமிழ்த் தேசியத்தின் பால் பற்றுறுதி கொண்ட பலருக்கும் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கக்கூடாது. ஒன்று கூடக்கூடாது என்ற தடை உத்தரவுகளை பிறப்பித்துக்கொண்டிருக்கின்றன என கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தமிழ்வின் மதிய நேர செய்திகளின் தொகுப்பு,