தமிழக மீனவர்களுக்கு எதிராக ராஜபக்ஷ அரசு நாடகம் - பழ. நெடுமாறன் கண்டனம்
தமிழக மீனவர்களுக்கு எதிராக ராஜபக்ஷ அரசு நாடகம் நடத்துகின்றது என தமிழர் தேசிய முன்னணி கட்சியின் தலைவர் பழ.நெடுமாறன் (Pazha Nedumaran) கண்டனம் தெரிவித்துள்ளார்.
இன்று வெளியான ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
இந்தியா – இலங்கைக்கு இடையே உள்ளமன்னார் வளைகுடா கடல் பகுதி முழுவதும் தனக்கு மட்டுமே சொந்தமானது போல சிங்கள அரசு கருதிக்கொண்டு தமிழக மீனவர்களைத் தொடர்ந்து வேட்டையாடி வருகிறது.
1980களின் தொடக்கத்திலிருந்து இன்று வரை தமிழ்நாட்டு மீனவர்களை சுட்டுக்கொல்வதும், படுகாயம் படுத்துவதும், சிறைப்பிடிப்பதும் அவர்களின் படகுகள், வலைகள் ஆகியவற்றைச் சேதப்படுத்துவதும் இன்றுவரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தமிழக அரசும், தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும் சிங்கள அரசின் இந்த அட்டூழியத்தைக் கண்டித்துக் குரல் எழுப்பியவுடன், அதை திசைத் திருப்பும் வகையில் தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை மீனவர்கள் ஆர்ப்பாட்டம் செய்வதாக ஒரு நாடகத்தை ராஜபக்ஷ அரசு அரங்கேற்றியிருக்கிறது. இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் ஊடுருவி அத்துமீறி செயல்படும் அந்நிய நாட்டுப் படைகளுக்கு இந்தியப் படைகள் உடனுக்குடன் பதிலடிக்கொடுப்பதை போல, மன்னார் வளைகுடாப் பகுதியில் அத்துமீறும் சிங்கள கடற்படைக்குப் பதிலடிக்கொடுக்க இந்தியக் கடற்படை முன்வரவேண்டும்.
தொடர்ந்து பாதிக்கப்படும் தமிழக மீனவர்களுக்கு உரிய இழப்பீட்டை சிங்கள அரசிடம் பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 1 மணி நேரம் முன்

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
