இலங்கைக்கு அழைப்பு விடுத்த உத்தர பிரதேச அரசாங்கம்

Srilanka India Colombo Cultural Event
By Kanamirtha Nov 01, 2021 10:36 AM GMT
Report

உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியில் 2021 நவம்பர் 1 முதல் 5ஆம் திகதி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரமாண்டமான தீபோத்ஸவ் நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக இலங்கையிலிருந்து 15 பேர் கொண்ட கலாச்சார குழு ஒன்று இந்தியாவின் உத்தரப் பிரதேச அரசாங்கத்தால் அழைக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,

இராமாயணத்தின் உலகளாவிய கலைக்களஞ்சியத்தின் இலங்கைப் பிரிவின் உறுப்பினர்களான ஞானகுமார் சிதம்பரம் மற்றும் காயத்திரி சுவீந்திரன் ஆகியோரும் கொழும்பிலுள்ள, சுவாமி விவேகானந்தா கலாச்சார மையம் மற்றும் நாட்டிய கலா மந்திர ஆகியவற்றின் புகழ்பெற்ற பரத நாட்டிய குருவான கலாசூரி ஸ்ரீமதி வாசுகி ஜெகதீஸ்வரனும் இக்குழுவுக்குத் தலைமை தாங்குகின்றனர்.

இக்கலாச்சார குழுவினரின் பயணத்துக்கு முன்னதாக இந்திய உயர் ஸ்தானிகர் ஸ்ரீ கோபால் பாக்லே இக்குழுவினரைச் சந்தித்து உரையாடியிருந்தார். இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பல நூற்றாண்டுகள் பழைமையான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் இத்தகைய கலாச்சார மற்றும் ஆன்மீக தொடர்புகளின் முக்கியத்துவத்தை அவர் இச்சந்திப்பின்போது எடுத்துரைத்தார்.

மேலும் இந்தியாவில் அவர்களின் கலாச்சார நிகழ்ச்சிகளுக்காக வாழ்த்துக்களையும் அவர் பகிர்ந்துகொண்டார். உத்தரப்பிரதேச அரசின் கலாச்சார திணைக்களத்தின் அயோத்தி ஆராய்ச்சி நிறுவனம் இலங்கையிலிருந்து 15 பேர் கொண்ட இக்கலாச்சார குழுவை ஏற்பாடு செய்துள்ளது.

இந்தியாவின் உத்தரபிரதேஷ மாநிலத்தில் புனித நதியான சரயுவின் கரையில் அயோத்தி அமைந்துள்ளது. இது இராமர் பிறந்த இடம் என நம்பப்படுவதால் இந்துக்களின் மிக முக்கியமான புனித யாத்திரை தலமாகக் கருதப்படுகிறது. இந்நிலையில் இங்கு பிரமாண்டமான ஆலயம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.

2017 ஆம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும், உத்தரப்பிரதேச அரசு அயோத்தியில் தீபாவளியை முன்னிட்டு தீபோத்ஸவ் என்ற விழாவினைக் கொண்டாடுகிறது. இந்த ஆண்டு நடைபெறும் ஐந்தாவது தீபோத்ஸவ் பதிப்பின்போது, முதன்முறையாக 500 ட்ரோன்கள் அயோத்தியின் வானத்தில் இராமாயணக் காட்சிகளைச் சித்தரிக்கவுள்ளன.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், இலங்கை உட்பட உலகம் முழுவதிலுமிருந்து வரும் கலாசாரக் குழுக்கள் இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட கலாச்சார நிகழ்ச்சிகளை இங்கு காட்சிப்படுத்துவார்கள். தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 3 ஆம் திகதியன்று 12 லட்சம் தீபங்கள் ஏற்றி சாதனை படைக்க உத்தரபிரதேஷ அரசு திட்டமிட்டுள்ளது.

அயோத்தியில் நடைபெறும் தீபோத்ஸவ் கொண்டாட்டங்களின் போது சரயு நதியின் கரையில் அமைந்திருக்கும் கம்பீரமான ‘ராம் கி பைதியில்’ பாரம்பரிய சுற்றுலா, மாநாடு, புத்தக வெளியீட்டு விழா, இராமாயண ஊர்வலம் புகைப்படக் கண்காட்சி, முப்பரிமாண ஒளிக்கீற்று காட்சிகள், திட்ட பிரதிமைகளின் திரையிடல் மற்றும் லேசர் ஒளிக்கற்றை காட்சிகள் உள்ளிட்டவை நடைபெறவுள்ளன.

நுவரெலியாவில் உள்ள சீதை அம்மன் ஆலயத்திலிருந்து அனுப்பப்பட்ட ஓர் அடையாள புனித சின்னம் அயோத்தியில் உள்ள ராம ஜென்மபூமி ஆலய தலைமை குருவிடம் இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் கௌரவ மிலிந்த மொரகொட அவர்களால் 2021 ஒக்டோபர் 28 ஆம் திகதி கையளிக்கப்பட்டிருந்தது. இப்புனித சின்னம் இலங்கையில் உள்ள சீதை அம்மன் ஆலயத்திலிருந்து உயர் ஸ்தானிகரால் இந்தியாவிற்கு எடுத்துவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி மங்களகரமான வப் போயா தினத்தன்று கொழும்பிலிருந்து புனித நகரமான குஷிநகருக்கு முதலாவது சர்வதேச விமானம் வந்தடைந்தமை இந்த சந்தர்ப்பத்தில் நினைவில்கொள்ளப்படவெண்டியதாகும்.

இலங்கையிலிருந்து இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர், அபிவிருத்திக் கூட்டிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சர் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் நாமல் ராஜபக்ச தலைமையிலான குழு இந்நிகழ்வுகளில் பங்கேற்றதுடன் இக்குழுவில் 4 இராஜாங்க அமைச்சர்கள், சிரேஷ்ட அதிகாரிகளுடன் இலங்கை முழுவதிலும் உள்ள பல்வேறு பிரிவுகள் மற்றும் புனித விகாரைகளை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட சிரேஷ்ட பௌத்த மதகுருமாரால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட அதி வணக்கத்திற்குரிய மகாசங்கத்தினரும் உள்வாங்கப்பட்டிருந்தனர்.

இத்தகைய கலாச்சார மற்றும் ஆன்மிக நிகழ்வுகள் மதங்களை கடந்து இரு நாடுகளுக்கும் இடையே உள்ள நிலையான மக்கள் - மக்கள் தொடர்பை உறுதிப்படுத்துகின்றன என குறிப்பிடப்பட்டுள்ளது.


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US