இறந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த அரசங்கம் தடை ஏற்படுத்தக்கூடாது: சமூக செயற்பாட்டாளர்
தமிழ் மக்களின் பண்பாடு கலாச்சார ரீதியாக இறந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு அரசாங்கம் தடை ஏற்படுத்தக்கூடாது என்று சமூக செயற்பாட்டாளர் தம்பையா யோகேஸ்வரன் (முல்லை ஈசன்) கோரிக்கை விடுத்துள்ளார்.
முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று(12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாம் எமது இறந்த உறவுகளுக்கு ஒவ்வொரு ஆண்டுகளிலும் நவம்பர் 27 ஆம் திகதி மலர்தூவி ஈகைசுடர் ஏற்றி அஞ்சலி செலுத்திவருகின்றோம்.
இந்த நிலையில் சென்ற ஆண்டு எமது இறந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு பல்வேறு தடைகள் ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில் உயிரிழந்த எம் உறவுகள் விதைக்கப்பட்ட இடங்களில் எதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி மலர் தூவி சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்துவதற்கு இலங்கை அரசு தடை ஏற்படுத்தக்கூடாது.
மேலும் இறந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு எந்த நாட்டிலும் எந்த
இடத்திலும் மறுக்கவோ அல்லது தடுக்கவோ முடியாது என்றும் அவர் இதன்போது
தெரிவித்துள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 3 மணி நேரம் முன்

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சரிகமப L'il Champs வின்னர் திவினேஷ் தனது தந்தைக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு.. இதோ பாருங்க Cineulagam
