அரசாங்கம் அனுபவம் இன்றி செயற்படுகின்றது! நிர்மால் தெவ்சிறி குற்றச்சாட்டு
அரசாங்கம் அனுபவம் இன்றி செயற்பட்டு வருவதாக பேராசிரியர் நிர்மால் தெவ்சிறி(Nirmal Devsiri) தெரிவித்துள்ளார்.
இணைய வழி காணொளியொன்றின் மூலம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மாவீரர் தின நிகழ்வுகளை பிரசாரம் செய்த குற்றச்சாட்டின் பேரில் மூன்று சமூக ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
போலி பிரசாரங்கள்
சமூக ஊடகங்களை கட்டுப்படுத்துவது அரசாங்கத்தின் அரசியலை களங்கப்படுத்திக்கொள்ளும் செயற்பாடாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் சவால்களை எதிர்கொள்ளும் விதம் அனுபவமில்லாமையை பிரதிபலிப்பதாக பேராசிரியர் தெவ்சிறி குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் இந்த செயற்பாடு அரசாங்கத்தை மட்டுமன்றி அரசாங்கத்தினை ஆட்சி பீடம் ஏற்றுவதற்கு பாடுபட்ட அனைவருக்கும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கைதுகள்
கைதுகள் மூலம் போலி பிரசாரங்களை கட்டுப்படுத்த முடியும் என நினைப்பது தவறானது எனவும் போலி பிரசாரங்கள் மேற்கொள்ளப்படும் காலகட்டத்தில் மக்கள் இந்த அரசாங்கத்திற்கு பாரிய ஆணையை வழங்கியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தை விடவும் நிலையான பிரபல்யத்தைக் கொண்டிருந்த ராஜபக்ச அரசாங்கம், அரச அடக்குமுறைகள் காரணமாக வீழ்ச்சியடைந்தது என நிர்மால் தெவ்சிறி சுட்டிக்காட்டியுள்ளார்.