புலம்பெயர் தமிழர்களின் நம்பிக்கையை அரசு வெல்ல வேண்டும்:சித்தார்த்தன்
"புலம்பெயர் தமிழர்களின் நம்பிக்கையை வெல்லும் வகையில் அரசு செயற்பட வேண்டும். அப்போது அவர்களால் துணிந்து முதலீடுகளை மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
"புலம்பெயர் தமிழர்கள் கடந்த காலங்களில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வந்தாலும், அவர்களுக்கு தடைகள் ஏற்பட்டன. உயிருக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.
இந்நிலைமை மாற வேண்டும். அப்போது பொருளாதார எழுச்சிக்கு அவர்களின் முதலீடுகளை பெறக்கூடியதாக இருக்கும். ரணில் நல்லவர். இருந்தாலும் தனித்துப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் மந்திரவாதி கிடையாது.
எனவே, அனைவரையும் அரவணைத்துச் செல்ல முற்பட வேண்டும். சவாலை
எதிர்கொள்ளும் ஆற்றல் ரணிலுக்கு உள்ளது" - என்றார்.
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam