அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் அறிவிப்பு
அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் திங்கட்கிழமை (13) முதல் தொழிற்சங்கம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்க அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இன்று இடம்பெற்ற அந்த சங்கத்தின் மத்தியக்குழு கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
தொழிற்சங்க நடவடிக்கை
இதன்படி, மேல், தென், மத்திய மற்றும் கிழக்கு ஆகிய 04 மாகாணங்களை உள்ளடக்கிய அனைத்து வைத்தியசாலைகளிலும் அன்றைய தினம் காலை 08 மணி முதல் இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக சங்கம் அறிவித்துள்ளது.
மேலும், வடக்கு, வடமத்திய, வடமேல், ஊவா மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களை உள்ளடக்கிய அனைத்து வைத்தியசாலைகளிலும் எதிர்வரும் 14ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 08.00 மணி முதல் இந்தப் பணிப்புறக்கணிப்பை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன், எதிர்வரும் 15ஆம் திகதி நாடளாவிய ரீதியில் அனைத்து வைத்தியசாலைகளையும் உள்ளடக்கிய பணிப்புறக்கணிப்புப் போராட்டமொன்றை முன்னெடுக்க அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று (10) இடம்பெற்ற விசேட மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri
