மருத்துவர்களிடம் அறவீடு செய்யும் வருமான வரியை குறைக்குமாறு பிரதமரிடம் கோரிக்கை
மருத்துவர்கள் உள்ளிட்ட உயர் தொழிற்துறைகளில் ஈடுபடும் அதிகாரிகளிடம் அறவீடு செய்யப்படும் வருமான வரியை தொகையைக் குறைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் (Mahinda Rajapaksa), அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் டொக்டர் அனுருத்த பாதெனிய இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.
நேற்றைய தினம் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள், பிரதமர் மஹிந்தவை அலரி மாளிகையில் வைத்து சந்தித்த போது இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தற்பொழுது அறவீடு செய்யப்படும் 24 வீத வருமான வரி அறவீட்டை 12 வீதமாக குறைக்குமாறு கோரியுள்ளனர்.
மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக கடமையாற்றிய காலத்தில் வரி அறவீட்டுத் தொகை 12 வீதமாக காணப்பட்டதாகவும் நல்லாட்சி அரசாங்கமே 24 வீதமாக உயர்த்தியது எனவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தில் CM விஜய் மற்றும் MK ஸ்டாலின்.. பத்திரிகை வைத்த கலாநிதி மாறன் Cineulagam
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan
முறையான கழிப்பறைகள் இல்லாத நாடு... விமர்சித்த கேற்றி ஸக்கரியாவுக்கு பதிலடி கொடுத்த சீனா News Lankasri