‘‘நாட்டை இருளை நோக்கி கொண்டு செல்லும் அரசாங்கம்’’
அரசாங்கம் நாட்டை இருளை நோக்கி கொண்டு செல்கின்றதே அன்றி, வெளிச்சத்தை நோக்கி கொண்டு செல்லும் அடையாளத்தை காண முடியவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
ஆனமடுவ தொகுதி அமைப்பாளர் அசேல பிரேமலால் கருணாரத்னவின் அலுவலகத்தை நேற்று முற்பகல் திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சௌபாக்கியத்திற்கு பதிலாக அரசாங்கம் அசௌபாக்கியத்தை மாத்திரமே நாட்டுக்கு மீதம் வைத்துள்ளது எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஒரு புறம் வேலை வாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தொழில் வாய்ப்புகள் இன்றி இளைஞர், யுவதிகள் கஷ்டத்தில் உள்ளனர். மறுபுறம் உழவர்கள் செய்வதறியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
முழு நாட்டு மக்களும் வாழ்க்கை தொடர்பான பாரதூரமான பல நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளனர். இந்த நிலைமை மாற்றக் கூடிய ஒரே சக்தி ஐக்கிய மக்கள் சக்தி மாத்திரமே எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் ஹப்புஹாமி, முன்னாள் பிரதியமைச்சர் நியோமால் பெரேரா உள்ளிட்டோர் கலந்துக்கொண்டுள்ளனர்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 4 மணி நேரம் முன்

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
