அபாய வலயங்களில் உள்ள மக்களுக்கு மாற்று காணி! வெளியான அறிவிப்பு
டித்வா புயல் காரணமாகப் பாதிக்கப்பட்ட காணிகள் குறித்து கணக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்குக் காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம் அவதானம் செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட நிலங்களைப் பாதுகாக்கப்பட்டதாக மாற்றிய பின், அந்த நிலங்களை மீண்டும் அளவிட வேண்டும் என்று காணி ஆணையாளர் நாயகம் சந்தன ரணவீர ஆராச்சி தெரிவித்தார்.
அனுமதியின்றி அரசாங்க நிலங்களில் குடியேற்றம்
அபாய வலயங்களில் அமைந்துள்ள நிலங்களைப் பாதுகாக்க முடிவு செய்யப்பட்டால், அனுமதிப்பத்திரம் கொண்ட அக்காணிகளின் பெறுமதியை மதிப்பீடு செய்து நட்டஈடு அல்லது மாற்றுக் காணி ஒன்றை வழங்க காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம் தயாராக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் அரசாங்க அதிபர்களிடமிருந்து நிலங்கள் தொடர்பாக தகவல்கள் கோரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையே சில குடியிருப்பாளர்கள் அனுமதியின்றி அரசாங்க நிலங்களில் குடியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri
சந்தோஷ செய்தியை வெளியிட்டுளள சிறகடிக்க ஆசை வெற்றி மற்றும் அவரது மனைவி... ஆனா இது வேற நியூஸ் Cineulagam
நிலா என் ஆளு, பத்திரமா கூட்டிட்டு போ, சோழனிடம் கூறிய ராகவ், அடுத்து நடந்தது?... அய்யனார் துணை சீரியல் Cineulagam