குத்தகைக்கு வழங்கப்படவுள்ள அரச காணிகள்: வரவு செலவு திட்டத்தில் முன்வைப்பு
தரிசு நிலங்களாக உள்ள அரச காணிகள் குத்தகை அடிப்படையில் தனியார் தரப்பினருக்கு வழங்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் தற்போது முன்வைத்து வரும் 2025ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், உற்பத்தி பொருளாதார நடவடிக்கைகளுக்கு அரசாங்கத்தால் பயன்படுத்தப்படாத அரசாங்கத்திற்கு சொந்தமான நிலங்கள் குத்தகைக்கு விடப்படும்.
அடையாளம் காணப்பட்டுள்ள நிலங்கள்
தரிசாக மாறிய பல நிலங்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், மட்டுப்படுத்தப்பட்ட வகையில் தான் இம்முறை வரவு - செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
அரச நிதி முகாமைத்துவ சட்டத்துக்கு அமைய வரவு - செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அநுரவும், தையிட்டி விகாரையும் தம்மதீபக் கோட்பாடும் 22 மணி நேரம் முன்

ஜெலென்ஸ்கி சர்வாதிகாரி... உக்ரைன் நாடே மிஞ்சாது: கோபத்தின் உச்சத்தில் டொனால்டு ட்ரம்ப் News Lankasri
