அரச வேலைக்கான ஆட்சேர்ப்பு தொடர்பில் வெளியான தகவல்
அரச துறையில் 30,000 பேரை ஆட்சேர்ப்பு செய்யும் திட்டத்தின் கீழ் 18,853 பட்டதாரிகள் மற்றும் இளைஞர், யுவதிகளை ஆட்சேர்ப்பு செய்யும் பணிகள் துரிதப்படுத்தப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அரச சேவையில் பல்வேறு நிறுவனங்களில் பணிக்குழாமினரை மீண்டும் மீளாய்வு செய்து, அத்தியாவசிய ஆட்சேர்ப்புக்களை மேற்கொள்வதற்காக விதந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்குப் பிரதமரின் செயலாளர் தலைமையில் அதிகாரிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை வழங்கியுள்ள அங்கீகாரம்
குறித்த குழுவின் விதந்துரைகளின் அடிப்படையில் தற்போது அரச சேவையில் புதிதாக 18,853 பேரை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதற்கமைய, நியமமான ஆட்சேர்ப்பு நடவடிக்கை முறைகளுக்கமைய அதற்கான விண்ணப்பங்களைக் கோரி குறித்த ஆட்சேர்ப்புக்களை செய்வதற்காக உரிய அமைச்சுக்கள் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
