இலங்கை அரசாங்கத்துக்கு 10 பில்லியன் ரூபா வரி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு
சீனி இறக்குமதியில் கடந்த ஆண்டு பிற்பகுதியில் கொண்டு வரப்பட்ட வரி திருத்தத்தை தொடர்ந்து இலங்கை அரசாங்கத்துக்கு 10 பில்லியன் ரூபா வரி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஜே.வி.பி இது தொடர்பில் நேற்று குற்றப்புலனாய்வுத்துறையிடம் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளது.
இந்த வரி சீர்திருத்தம் காரணமாக இறக்குமதியில் ஈடுபடும் அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் பாரிய நன்மை அடைந்துள்ளனர்.
எனவே இது ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட நிதிக்குற்றம் என்று ஜே.வி.பி அரசியல் பீட உறுப்பினர் வசந்த சமரசிங்க தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் நிதி அமைச்சு உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களின் ஆதரவுடன் நிதி மோசடி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், சில இறக்குமதியாளர்களுக்கு பயனளிப்பதற்காக வர்த்தமானி அறிவித்தல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவரும், வில்மா குழுமத்தின் தலைவரும் இந்த முறைப்பாட்டில் பதிலளிக்க வேண்டியவர்களாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri