மாணவர்களின் இணையவழி கல்வியில் அரசு மிகவும் தோல்வியை சந்தித்துள்ளது!
மாணவர்களின் இணையவழி கல்வியில் அரசு மிகவும் தோல்வியைச் சந்தித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவரினால் இன்று யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
தற்போது நடைமுறையில் உள்ள இணைய வழிக்கல்வியை நிறுத்துமாறு அனைத்து ஆசிரியர் தொழிற்சங்கங்களும் அறிவித்துள்ளது. அதற்கமைய இணையவழி கல்வியை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
மாணவர்களின் இணையவழி கல்வியில் அரசு மிகவும் தோல்வியைச் சந்தித்துள்ளது. இதனடிப்படையிலேயே மீண்டும் பாடசாலை ஆரம்பித்து பரீட்சைகளை நடாத்தி சாதாரணமான நிலையில் எல்லாம் உள்ளது என்று கூற அரசு முனைகிறது.
மலைய மக்களைப் பொறுத்தவரை அவர்களது 1000 ரூபாய் சம்பள விடயம் பெரும் பிரச்சினையாக உள்ளது. இந்நிலையில் அங்குள்ள மாணவர்களின் இணையக் கல்வி சாத்தியமற்ற ஒன்று.
இணைய வசதிகள் அற்ற நிலையில் மரங்களிலும், கூரைகளிலும், மலைகளிலும் ஏறி இணைய வசதியைப் பெற வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளனர்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri

சீனா மீது திரும்பிய ட்ரம்பின் கோபம்... ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு ரத்தாகும் என மிரட்டல் News Lankasri
