“வெளிநாடுகளுடனான இராஜதந்திர உறவில் இலங்கை அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது”
வெளிநாடுகளுடனான இராஜதந்திர உறவில் இலங்கை அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதாக கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் இரா.துரைரெட்னம் (R.Thurairatnam) தெரிவித்துள்ளார்.
இந்தியா தொடர்பிலான இலங்கையின் முடிவுகளில் பல மாற்றங்களை இலங்கை எடுத்துள்ளதாகவும் இதன்போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
இலங்கை அரசாங்கம் இந்த மாற்றங்கள் ஊடாக தமிழ் மக்கள், சிறுபான்மை இனங்கள் தொடர்பான விடயங்களிலும் யுத்தகாலத்தில் தமிழ் மக்கள் எதிர்கொண்ட பாதிப்புகள் தொடர்பான விடயங்களிலும் மாற்றங்களை கொண்டு வந்து சிறுபான்மையின மக்களின் மனங்களை வெல்ல வேண்டும்.
நாங்கள் வடக்கு, கிழக்கு தமிழ் தேசத்திற்கான போராட்டத்தினை முன்னெடுத்தாலும் அரசாங்கம் குறைந்தபட்சம் 13ஆவது அரசியலமைப்பு சட்டத்தினையாவது இலங்கை அரசாங்கம் முழுமையான அமுல்படுத்த முன்வர வேண்டும் என கூறியுள்ளார்.

மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri