தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றாத அநுர அரசு..! அதிருப்தி வெளியிட்ட சத்தியலிங்கம்

Sri Lankan Tamils Vavuniya Department of Immigration & Emigration Nothern Province Economy Canada
By Thileepan May 09, 2026 11:54 AM GMT
Report

தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற இந்த அரசு தவறிவிட்டதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம்(07.05.2025) நடைபெற்ற அவசரகால சட்ட நீடிப்பு மற்றும் குடிவரவு, குடியகல்வு சட்டத்திருத்தங்கள் மீதான நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

அவசரகாலச் சட்ட நீடிப்பு

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று நான்கு சட்டமூலங்களின் ஒழுங்குவிதிகள் திருத்தப்பட்டு சபையின் அனுமதிக்கவும் அவசரகால சட்டத்தை நீடிப்பதற்கான அனுமதியையும் சபையிடம் கோரியுள்ளீர்கள்.

நாங்கள் அவசரகாலச்சட்ட நீடிப்பை எதிர்க்கிறோம். கடந்தகாலத்தில் அவசரகால சட்டத்தையும் பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தையும் மோசமாக பயன்படுத்தியவர்கள் இன்று அவசரகால சட்டம் தொடர்பாக பேசுவது வேடிக்கையானது.

தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றாத அநுர அரசு..! அதிருப்தி வெளியிட்ட சத்தியலிங்கம் | Government Has Failed Fulfill Aspirations Tamil

இந்த ஒழுங்குமுறைகள் ஏற்கனவே உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு சட்ட ஒழுங்கு முறைகளைப் பின்பற்றி, பயண அங்கீகாரங்களுக்கான மேம்படுத்தப்பட்ட நடைமுறைகளையும், நுழைவிசைவு வழங்குவதற்கான குறிப்பிட்ட விதிமுறைகளையும் அறிமுகப்படுத்துகின்றது.

2006 ஆம் ஆண்டின் குடிவரவு மற்றும் குடியகல்வு, வதிவிட, வருகை மற்றும் இடைத்தங்கல் நுழைவிசைவு வழங்குவதை நிர்வகிக்கின்றன.

மேலும், விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும்போது தற்காலிக இடைக்கால விசாக்களை வழங்க தலைமை கட்டுப்பாட்டாளருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

மின்னணு பயண அனுமதி (ETA): அமைச்சரின் ஆணை மூலம், குறுகிய கால தங்குதல்களின் வகைகள் மற்றும் செல்லுபடியாகும் காலத்தைப் மாற்றும் வகையில், மின்னணு பயண அனுமதி அமைப்பைத் திருத்தலாம்.

இந்தச் சட்டம், நுழைவு ஒப்புதல்களுக்கான கடுமையான தேவைகள், சட்டவிரோத நுழைவுக்கான தண்டனைகள் மற்றும் நாடு கடத்துவதற்கான விதிகளை உள்ளடக்கியுள்ளதுடன், சட்டத்தின் கீழ் செய்யப்படும் குற்றங்களுக்கான பிணை நடைமுறைகளில் கவனம் செலுத்தும் புதிய திருத்தங்களையும் கொண்டுள்ளது.

இந்த ஒழுங்குமுறை மாற்றங்கள், குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையால் நிர்வகிக்கப்படும் சட்டப்பூர்வமான, ஒழுங்கமைக்கப்பட்ட பயணம் மற்றும் வசிப்பிடத்தை எளிதாக்குவதோடு, தேசியப் பாதுகாப்பையும் உறுதிசெய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த இந்த சட்ட திருத்தம் செய்யப்பட்டாலும் வேறுபல காரணிகளும் தேசிய பாதுகாப்பில் தாக்கம் செலுத்துகின்றன.

குறிப்பாக அரசியல், பொருளாதார உறுதிப்பாடு ஆகியன முதன்மையானவை ஆகும்.

இந்த நாட்டின் அரசியல் உறுதிப்பாட்டை நிலைநாட்ட பல தசாப்தங்களாக தீர்க்கப்படாதுள்ள எண்ணிக்கையில் சிறுபாண்மையான மக்களின் அரசியல் வேட்கை நிவர்த்திசெய்யப்படல் வேண்டும்.

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது இருந்த அந்த நம்பிக்கை இப்போது எம்மத்தியில் குறைந்துகொண்டுபோவதை அவதானிக்கலாம்.

அரசியல் பொருளாதார மேம்பாடு 

பொருளாதார உறுதிப்பாட்டை பலப்படுத்தும் ஒருசில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் எமது தாயகப்பிரதேசத்தில் அவ்வாறான நடவடிக்கைகளை அறவே காண முடியாதுள்ளது.

வேலை வாய்ப்பை ஏற்படுத்தக்கூடிய எந்தவிதமான சிறு, இடைத்தர மற்றும் பாரிய முதலீட்டுக்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை.

தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றாத அநுர அரசு..! அதிருப்தி வெளியிட்ட சத்தியலிங்கம் | Government Has Failed Fulfill Aspirations Tamil

முதலீட்டாளர்களுக்கான நிர்வாக ரீதியான எந்தவிதமான ஒழுங்குகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. முதலீட்டிற்கான நிலத்தை பெறுவதிலிருந்து ஏனைய அனுமதிகளை பெற முதலீட்டாளர்கள் வருடக்கணக்கில் அலைக்களிக்கப்படுகிறார்கள்.

முதலீட்டாளர்கள் வருவதற்கான முக்கியமான போக்கு-வரவு இணைப்பு மேம்படுத்தப்பட வேண்டும். ஆனால் இந்திய அரசால் கடனற்ற உதவியாக காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்காக வழங்கப்பட்ட 63-65 மில்லியன் அமெரிக்க டொலர்களை (2200 கோடி இலங்கை ரூபா) பயன்படுத்த தொடக்க வேலைகள் கூட வருடக்கணக்கில் ஆரம்பிக்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது.

அதேவேளை, பலாலி விமானநிலைய அபிவிருத்தி வேலைகள் நடைபெற்றுவந்தாலும் தூரநாடுகளில் இருந்து வரும் பெரிய விமானங்கள் தரையிறங்க ஏதுவான வசதிகள் செய்யப்படல் வேண்டும்.

பொருளார முன்னேற்றத்திற்கு எரிசக்தி அவசியமானது. அது மக்களுக்கு குறைந்தவிலையில் தொடரச்சியாக கிடைக்கப்படல் வேண்டும்.

அதற்காக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எரிபொருளை சேமிக்கும் வசதியை மேம்படுத்த திருகோணமலையில் உள்ள எரிபொருள் சேமிப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும்.

ஆனால் இந்த தேவைக்காக இலங்கை-இந்திய-ஐக்கிய அரபு இராட்சியம் ஆகிய மூன்றுநாடுகள் கைச்சாத்திட்ட கூட்டு உடன்படிக்கை இன்றுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

எனவே அரசியல் பொருளாதார மேம்பாடு ஏற்படுத்தப்படாவிட்டால் இந்தநாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுமா என்ற கேள்விக்கு அரசாங்கமே பொறுப்புச்சொல்ல வேண்டும். அரச - தனியார் பேரூந்து சேவை ஒருங்கிணைந்த நேர அட்டவணையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

வடக்கு மாகாண போக்குவரத்து சேவை

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் இது நடைமுறையில் உள்ளது. ஒருங்கிணைந்த நேர அட்டவணை இல்லாத காரணத்தால் அவர்களுக்கு இடையே ஏற்படும் போட்டியினால் விபத்துக்கள் ஏற்படுகின்றது.

அத்துடன் தனியார், இ.போ.ச ஊழியர்களிடையே வீதியில் கை கலப்பு ஏற்படுவதை பலசந்தர்ப்பங்களில் காணக்கூடியதாக உள்ளது. இதனால் பயணிகள் உயிரை பணயம் வைத்தே பயணம் செய்யவேண்டியுள்ளது.

வவுனியா பேரூந்து நிலையம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நிர்வாகத்திலிருந்து வடக்கு மாகாண போக்குவரத்து அதிகார சபைக்கு மாற்றப்படல் வேண்டும்.

தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றாத அநுர அரசு..! அதிருப்தி வெளியிட்ட சத்தியலிங்கம் | Government Has Failed Fulfill Aspirations Tamil

வடக்கு மாகாணத்தில் வவுனியா தவிர்ந்த ஏனைய பேருந்து நிலையங்கள் வடக்கு மாகாண போக்குவரத்து அதிகார சபையினாலேயே நிர்வகிக்கப்படுகின்றது.

வவுனியா பேருந்து நிலையம் தவிர்ந்த ஏனைய பேருந்து நிலையங்கள் உள்ளூராட்சி மன்றங்களின் பராமரிப்பில் உள்ளது. வவுனியா பேருந்து நிலையமும் மாநகரசபையின் பராமரிபிற்குள் கொண்டுவரப்படல் வேண்டும்.

சிற்றுண்டிச்சாலையை கையாள்வது மற்றும் மலசலகூட வசதிகளை பேணுவது போன்ற விடயங்களை உள்ளூராட்சி மன்றங்களின் ஆழுகைக்குள் கொண்டு வருவதனூடாக ஏற்படும் வருமானத்தை மக்கள் சேவைக்கு பயன்படுத்த முடியும்.

மேலும், மாகாணங்களுக்கு இடையான போக்குவரத்து சேவையில் புதிதாக கொண்டுவரப்படு திருத்தத்தின்படி ஒரு நபர் அல்லது நிறுவனம் அந்த வழித்தடத்தில் அனுமதிக்கப்பட்ட மொத்த பேருந்து சேவை எண்ணிக்கையில் 20% மட்டுமே கொண்டிருக்கலாம்.

அவ்வாறாயின் ஏற்கனவே 20% க்கு மேற்பட்ட எண்ணிக்கையில் உள்ள பேருந்துகளை கொண்டவர்களுக்கு எவ்வாறான நிவாரணம் வழங்கப்படும் என்பதை தெளிவுபடுத்தவேண்டும் என கோருகிறேன் என தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு: 36 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தீவிர ஆலோசனை..! தலைகீழாக மாறுமா விஜயின் நிலைமை

தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு: 36 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தீவிர ஆலோசனை..! தலைகீழாக மாறுமா விஜயின் நிலைமை

மர்மமான முறையில் உயிரிழந்த கபில சந்திரசேன! மகிந்தவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதம்

மர்மமான முறையில் உயிரிழந்த கபில சந்திரசேன! மகிந்தவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதம்

மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Toronto, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US