பில்லியன் கணக்கான அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட அரசாங்கம் திட்டம்
இரத்தினக்கற்கள் ஏற்றுமதி மூலம் 2025 ஆம் ஆண்டளவில் 2 பில்லியன் அமெரிக்க டொலர் வருடாந்த வருமானத்தை ஈட்ட எதிர்பார்ப்பதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவர் விராஜ் டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்
இந்த வருடத்தின் முதல் ஏழு மாதங்களில் இரத்தினக்கற்கள் ஏற்றுமதி மூலம் சுமார் 312 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானம் பெற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
சட்டவிரோத இரத்தினக்கல் ஏற்றுமதி
இதேவேளை, தேசிய இரத்தினம் மற்றும் ஆபரண ஆணையம் இந்த ஆண்டு இறுதிக்குள் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டும் என கணித்துள்ளது.
இதேவேளை, சட்டவிரோத இரத்தினக்கல் ஏற்றுமதியை கட்டுப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவது குறித்தும் அவர் கவனம் செலுத்தியுள்ளார்.
நாட்டிற்குள் ஏலம் விடுவதன் மூலம் வெளிநாட்டு கொள்வனவு செய்பவர்கள் நேரடியாக இரத்தினக்கற்களை கொள்வனவு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும்.
இதன்படி, வெளிநாட்டு கொள்வனவு செய்பவர்கள் இந்த நாட்டில் உள்ள ஏலங்களில் நேரடியாக இரத்தினக்கற்களை கொள்வனவு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என வும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் திடீர் மாற்றம்?... என்ன விஷயம் பாருங்க, ரசிகர்கள் வருத்தம் Cineulagam

மீனாவிற்கு புடவை எல்லாம் வாங்கிகொடுத்து செல்லம் என கொஞ்சம் விஜயா.. சிறகடிக்க ஆசை சீரியலில் என்ன தான் நடக்கிறது? Cineulagam

என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri

விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் புதிய தோற்றத்தில் ஆர்த்தி ரவி! எப்படி இருக்காங்கன்னு பாருங்க Manithan

சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam
