அரச படைகள் இந்த நாட்டில் ஒரு இனத்தை அழிக்கின்ற படையாகவே இருந்திருக்கின்றார்கள்: தவராசா கலையரசன் (Photos)

Ampara Sri Lanka Politician Sri Lanka
By Farook Sihan Aug 13, 2022 01:16 PM GMT
Report

அரச படைகள் இந்த நாட்டில் ஒரு இனத்தை அழிக்கின்ற ஒரு படையாகவே இருந்திருக்கின்றார்கள் எனவும் சமாதானம் நீதியை நிலைநாட்டுகின்ற அரச படைகளாக அவர்கள் இந்த நாட்டில் இருக்கவில்லை என அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.

1990 ஆம் ஆண்டு வீரமுனையில் இடம்பெற்ற படுகொலை தினத்தின் 32 ஆவது வருட நினைவேந்தலில் நேற்று(12) கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரச படைகள் இந்த நாட்டில் ஒரு இனத்தை அழிக்கின்ற படையாகவே இருந்திருக்கின்றார்கள்: தவராசா கலையரசன் (Photos) | Government Forces Army Destroyed Nation Country

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘’தமிழர்களின் இன ஒழிப்பின் அங்கமாக இந்த வீரமுனை படுகொலை நடந்தேறி இருக்கின்றது. கடந்த 32 ஆண்டுகளுக்கு முன்னர் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எல்லை கிராமங்களில் வாழ்ந்த தமிழ் மக்கள் விரட்டி விரட்டி வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட இத்தினத்தை அனுஸ்டித்து அஞ்சலி செலுத்தி வருகின்றோம்.

உண்மையில் இலங்கை நாட்டில் தமிழரான பிறந்த எங்களுக்கு இது தான் நிலைமை என்ற செய்தியை உலகத்திற்கு சொல்கின்ற வகையில் இந்த நாட்டை ஆண்ட தலைவர்கள் தொடர்ச்சியாக அழித்து வந்திருக்கின்றார்கள் என்பது உதாரணமாகும்.

அரச படைகள் இந்த நாட்டில் ஒரு இனத்தை அழிக்கின்ற படையாகவே இருந்திருக்கின்றார்கள்: தவராசா கலையரசன் (Photos) | Government Forces Army Destroyed Nation Country

அழிக்கப்பட்ட தமிழ் மக்களின் அடையாளம் 

1990 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் வாழ்ந்த பிரதேசங்களில் எந்தவிதமாக கேள்வி கணக்குமின்றி கொடூரமான முறையில் சமாதானம், நீதியை நிலைநாட்டுகின்ற அரச படைகள் இந்த நாட்டில் ஒரு இனத்தை அழிக்கின்ற ஒரு படையாகவே இருந்திருக்கின்றார்கள்.

சமாதானம், நீதியை நிலைநாட்டுகின்ற அரச படைகளாக அவர்கள் இந்த நாட்டில் இருக்கவில்லை.அது மாத்திரமின்றி அம்பாறை மாவட்டத்தின் எல்லையில் நாங்கள் பிறந்து வளர்ந்தவர்கள்.

நேரடியாக எம்மவர்கள் கொலை செய்யப்பட்டதனை அவதானித்தவன் என்ற வகையில் எல்லைக் கிராமங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டன.

குறிப்பாக அம்பாறை என்ற நகரில் எங்களுடைய தமிழ் மக்கள் வாழ்ந்திருக்கின்றார்கள்.இன்று அங்கு தமிழர்களின்  குடியிருப்பும் இருந்த எந்தவொரு அடையாளமும் இல்லை என்ற செய்தியை சொல்ல விரும்புகின்றேன்.

அரச படைகள் இந்த நாட்டில் ஒரு இனத்தை அழிக்கின்ற படையாகவே இருந்திருக்கின்றார்கள்: தவராசா கலையரசன் (Photos) | Government Forces Army Destroyed Nation Country

இந்த கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பதை தெளிவுப்படுத்த விரும்புகின்றேன். இங்கு வாழ்ந்த தமிழர்களை தேடி தேடி அழித்தார்கள்.

கல்விமான்களாக இருந்தவர்கள், சமூகத்தில் பற்றுறுதி கொண்டவர்கள், சமூகத்தை வழிநடத்த கூடியவர்களாக இருந்தவர்களை அரச படையினர் திட்டமிட்டு அழித்திருந்தார்கள்.

ஆகவே நாங்கள் இவ்வாறான நினைவுகளை ஏன் நினைவு கூறுகின்றோம் என்றால் எதிர்காலத்தில் இந்த நாட்டில் தமிழர்கள் வாழ்வதற்குரிய அனைத்து உரிமையும் கிடைக்கப்பெற வேண்டும்.

அரச படைகள் இந்த நாட்டில் ஒரு இனத்தை அழிக்கின்ற படையாகவே இருந்திருக்கின்றார்கள்: தவராசா கலையரசன் (Photos) | Government Forces Army Destroyed Nation Country

வாழ்வுரிமைகளை மறுக்கின்ற சூழல்

தொடர்ச்சியாக இந்த நாட்டில் தமிழர்கள் அடிமைத்தனத்துடன் தங்களது வாழ்வுரிமையை மறுக்கின்ற சூழலில் வாழ முடியாது என்ற அடிப்படையில் தான் நாங்கள் இந்த நினைவு கூறல்களை நினைவு கூர்ந்து வருகின்றோம்.

குறிப்பாக அம்பாறை மாவட்டத்தின் எல்லை கிராமங்களில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் யுவதிகள் கொலை செய்யப்பட்ட வரலாறுகளை மறந்து விட முடியாது.

மக்கள் அழிக்கப்பட்ட வரலாறுகள்

அதன் அடிப்படையில் வீரமுனை மாத்திரமல்லாது சொறிக்கல்முனை ,பெரியநீலாவணை, சவளக்கடை, திராய்க்கேணி, காரைதீவு,  அக்கரைப்பற்று, உடும்பன்குளம், பொத்துவில், வளத்தாப்பிட்டி மற்றும் மல்வத்தை போன்ற பிரதேசத்தில் திட்டமிட்டு எங்களது மக்கள் அழிக்கப்பட்ட வரலாறுகளை நீங்கள் நினைவு கூற வேண்டும் என கூறியுள்ளார்.

அரச படைகள் இந்த நாட்டில் ஒரு இனத்தை அழிக்கின்ற படையாகவே இருந்திருக்கின்றார்கள்: தவராசா கலையரசன் (Photos) | Government Forces Army Destroyed Nation Country

இந்நினைவேந்தல் நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில், உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


GalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US