கொரோனா கட்டுப்பாட்டிலும் அரசு தோல்வி! திஸ்ஸ அத்தநாயக்க

covid Tissa Attanayake
By Independent Writer Jan 12, 2021 08:29 PM GMT
Report

"கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களைக்கூடப் பாதுகாக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த அரசானது பொருளாதாரம், நிர்வாகம் என்பவற்றில் மாத்திரமின்றி கொரோனாக் கட்டுப்பாட்டிலும் தோல்வியடைந்துள்ளது என்பது தெளிவாகின்றது.

" இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

"அரசின் பலவீனத்தையும் ஜனாதிபதியின் குறைபாடுகளையும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இவ்வாறு சுட்டிக்காட்டப்படும் குறைபாடுகளை ஏற்றுக்கொண்டு அந்த குறைபாடுகளை நீக்கக்கொள்ள வேண்டுமே தவிர கருத்தைத் தெரிவித்தவருக்கு அச்சுறுத்தல் விடுக்கக்கூடாது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இவ்வாறான செயற்பாடுகள் சிவில் நிர்வாகத்திலிருந்து விலகி நாடு இராணுவ நிர்வாகத்தை நோக்கிச் செல்கின்றது என்பது தெளிவாகின்றது.

ஜனாதிபதியின் இந்தக் கருத்தை ஐக்கிய மக்கள் சக்தி கடுமையாக எதிர்க்கின்றது. நாட்டின் தலைவரொருவர் இவ்வாறு கருத்துக்களைத் தெரிவிப்பது பொறுத்தமற்றது. இவ்வாறான குணாதிசயம் தலைமைத்துவப் பண்புக்கும் பொறுத்தமானதல்ல.

கொரோனாத் தொற்றிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கூடப் பாதுகாக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அரசானது பொருளாதாரம், நிர்வாகம் என்பவற்றில் மாத்திரமின்றி கொரோனாக் கட்டுப்பாட்டிலும் தோல்வியடைந்துள்ளது என்பது தெளிவாகின்றது.கொரோனாத் தொற்று உறுதி செய்யப்படுவது சாதாரண விடயமாகும் என்றும், அதனால் நாடாளுமன்றத்தை முழுமையாக மூட வேண்டிய தேவை கிடையாது என்றும் சபாநாயகர் கூறியிருக்கின்றார்.

நாடாளுமன்றத்தை முழுமையாக மூடாமல் அதன் செயற்பாடுகளைத் தடையின்றி முன்னெடுக்க வேண்டும் என்பது எமது நிலைப்பாடும்கூட. ஆனால், அங்கும் பலருக்குத் தொற்று ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை யார் ஏற்றுக்கொள்வது?

சபாநாயகர் உள்ளிட்ட அதிகாரிகளே அதனைப் பொறுப்பேற்க வேண்டும். முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் நாடாளுமன்றத்தினுள் பாரதூரமான நிலைமையே ஏற்படும்.

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு அரசு எடுத்துள்ள தீர்மானத்துக்குப் பலரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் எமக்கும் உடன்பாடிருக்கின்றது. ஆனால், அதற்கு உகந்த சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும்.

காரணம் தற்போது கொரோனாப் பரவல் சமூகப் பரவலாக மாற்றடைந்து நாடளாவிய ரீதியில் பரவியுள்ளது. அதனால் மக்கள் மத்தியிலும் மாணவர்கள் மத்தியிலும் காணப்படும் அச்சம் நீக்கப்பட வேண்டும்.

பாடசாலைகளில் சுகாதாரப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து கொடுப்பதற்கும் மேலதிகமாக கட்டம் கட்டமாக பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றோம்.

முழு உலகமும் அவதானம் செலுத்தியுள்ள கொரோனாத் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள அரசு துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு நிதி இல்லை என்று கூற முடியாது.

காரணம் கொரோனாத் தொற்றுக்காக பல்வேறு வகையில் நிதி உதவிகள் அரசுக்குக் கிடைத்துள்ளன.

இவ்வாறான நிலைமைக்கு மத்தியிலும் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் சின்னத்தை மாற்றுவதற்கு பல பில்லியன் ரூபா செலவிடப்பட்டிருக்கின்றது. அது தற்போது அநாவசியமான செலவாகும்" - என்றார்.  

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US