கோட்டாபயவின் தனிப்பட்ட பணியாளராக நெருங்கிய உறவினர்! அரச ஊதியமும் கிடைக்கும்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது தனிப்பட்ட பணியாளராக, நெருங்கிய உறவினர் ஒருவரை நியமிப்பதற்கு, அரசாங்கத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார்.
அவர் அரச ஊதியத்தைப் பெறுவார்.
குடியிருப்பை மாற்ற விரும்பும் கோட்டாபய
இந்தநிலையில் கோட்டாபய ராஜபக்ச, தற்போது தங்கியிருக்கும் வீட்டை மாற்றிக்கொள்ள
விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, மலலசேகர மாவத்தையின்( பௌத்தலோக மாவத்தைக்கு புல்லர்ஸ் வீதியின் முன்பக்கம் அமைந்துள்ள) வீட்டுப்பகுதி மிகவும் இரைச்சலாக உள்ளது என்ற காரணத்தினால் குடியிருப்பை மாற்ற விரும்புகிறார்.
இதன்படி, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தற்போது தங்கியுள்ள ஸ்டான்மோர் கிரெசீன் பங்களாவிற்கு அவர் செல்ல வாய்ப்புள்ளது.
இதனையடுத்து மகிந்த ராஜபக்ச, விஜேராம மாவத்தையில் (பிரிட்டிஷ் உயர்
ஸ்தானிகராலயத்திற்கு அருகில்) தனது முன்னைய வீட்டுக்கு திரும்புவார் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 1 மணி நேரம் முன்

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
