அரச ஊழியர்களுக்கு 50ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம்! அநுர அரசாங்கத்திற்கு எச்சரிக்கை
அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தை 50 ஆயிரம்ரூபா வரை உயர்த்துமாறு பல்வேறு தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளன.
கடந்த வரவு செலவுத்திட்டத்தின் போது 24,250 ரூபாவாக இருந்த அடிப்படைச் சம்பளம், 40 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படுவதாக ஜனாதிபதி அறிவித்திருந்தார்.
அரசாங்கத்திற்கு எச்சரிக்கை
அதற்காக 15,750 ரூபா சம்பள அதிகரிப்பும் அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.

எனினும் தற்போதைய விலைவாசி உயர்வின் காரணமாக இந்தச் சம்பளம் செலவுகளைச் சமாளித்துக் கொள்ளப் போதுமானதாக இல்லாத காரணத்தினால், அடிப்படைச் சம்பளத்தை குறைந்த பட்சமாக 50 ஆயிரம் ரூபாவாக உயர்த்துமாறு பல்வேறு தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
அரசாங்கம் அதற்கான நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்காத பட்சத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள நேரிடும் என்றும் அவை எச்சரிக்கை விடுத்துள்ளன.
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam