அரச ஊழியர்களின் சம்பளத்திற்கு இணையான சம்பள அதிகரிப்பு! அமைச்சரவை அனுமதி
தனியார் துறையினரின் சம்பள அதிகரிப்பு தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அரச ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு இணையாக, தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தையும் உயர்த்துவதற்கு 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட யோசனையில் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில், தேசிய குறைந்தபட்ச மாதாந்திர சம்பளம் மற்றும் தேசிய குறைந்தபட்ச நாளாந்த சம்பளத்தை திருத்துவதற்கும், அதனுடன் தொடர்புடைய ஏனைய சட்ட நடவடிக்கைகளை பின்பற்றுவதற்கும் தொழில் அமைச்சர் முன்வைத்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
உயர்த்தப்படும் குறைந்தபட்ச சம்பளம்
இதன்படி, 2025 ஏப்ரல் 01 முதல் நடைமுறைக்கு வரும் வகையில், தேசிய குறைந்தபட்ச மாதாந்திர சம்பளம் 17,500 ரூபாவிலிருந்து 27,000 ரூபாவாக 9,500 ரூபாவால் உயர்த்தப்படும்.
2025 ஏப்ரல் 01 முதல் நடைமுறைக்கு வரும் வகையில், தேசிய குறைந்தபட்ச நாளாந்த சம்பளம் 700 ரூபாவிலிருந்து 1,080 ரூபாவாக 380 ரூபாவால் உயர்த்தப்படும்.
2026 ஜனவரி 01 முதல் நடைமுறைக்கு வரும் வகையில், தேசிய குறைந்தபட்ச மாதாந்திர சம்பளம் 27,000 ரூபாவிலிருந்து 30,000 ரூபாவாக 3,000 ரூபாவால் உயர்த்தப்படும்.
2026 ஜனவரி 01 முதல் நடைமுறைக்கு வரும் வகையில், தேசிய குறைந்தபட்ச நாளாந்த சம்பளம் 1,080 ரூபாவிலிருந்து 1,200 ரூபாவாக 120 ரூபாவால் உயர்த்தப்படும்.

6 நாள் முடிவில் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam

துபாயில் இந்தியர்களை வாளால் வெட்டிக்கொன்ற பாகிஸ்தானியர்: அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள் News Lankasri

சவுதி தூதருடன் தொடர்பு.,ஊடகங்களில் பரவிய வீடியோ: பங்களாதேஷ் மாடல் மேக்னா ஆலம் அதிரடி கைது! News Lankasri
