அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
வரவு செலவுத்திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கும் அரசாங்கத்தின் முடிவு சில ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதாக பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ சுட்டிகாட்டியுள்ளார்.
எனினும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சமர்ப்பித்துள்ள வரவு செலவுத்திட்டத்தை பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ பாராட்டியுள்ளார். இது மிகவும் சரியான திட்டமிடல் எனவும் அவர் பாராட்டியுள்ளார்.
இதற்கிடையில், புதிய சுங்கச் சட்டத்தை அறிமுகப்படுத்துதல், தனியார் துறையுடன் இணைந்து ஏற்றுமதி மேம்பாட்டு மண்டலங்களை நிறுவுதல், கொழும்பு துறைமுகத்தில் இரண்டு முனையங்களை மேம்படுத்துதல் மற்றும் திருகோணமலையில் எண்ணெய் தொட்டிகளை மேம்படுத்துதல் போன்ற முடிவுகள் குறித்து தனநாத் பெர்னாண்டோ சிறப்பு கவனம் செலுத்தியுள்ளார்.
அரச ஊழியர்கள்
நிவாரண முயற்சிகளுக்காக 232 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்வது, அரசாங்கத்தின் கவனம் சமூகப் பாதுகாப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதை வெளிப்படுத்துவதாக ஆய்வாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கும் முடிவு சில ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
அரசு ஊழியர்களின் சம்பளத்தை இந்த அளவுக்கு அதிகரிப்பது பொருளாதாரத்தின் மீது தாங்க முடியாத சுமை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சம்பள அதிகரிப்பு
வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட சம்பள உயர்வை பூர்த்தி செய்ய அரசாங்கம் மூன்று ஆண்டுகளுக்குள் 300 பில்லியன் ரூபாயைக் கண்டுபிடிக்க வேண்டும்.
எனினும் இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டவைகள் மற்றொரு முக்கிய நேர்மறையான அம்சம் சந்தையை அதிர்ச்சிக்குள்ளாக்கும் முடிவுகள் இல்லாதது என்றும் தனநாத் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.

எதிர்நீச்சல் சீரியலில் ரீ-என்ட்ரி கொடுத்த இன்னொரு பிரபலம்.. யார் பாருங்க, இனி தெறிக்க போகுது Cineulagam

நாசா விண்வெளி வீரரின் உடல்நலம் குறித்து மருத்துவர்கள் கவலை: புதிய புகைப்படத்தால் அதிர்ச்சி News Lankasri

7 அறைகள் முதல் உடற்பயிற்சி கூடம் வரை.., சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள வசதிகள் என்னென்ன? News Lankasri

பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்: அடுத்த 48 நாட்கள் என்ன நடக்கும்? டால்பின்களின் வரவேற்பு வீடியோ News Lankasri
