வரலாற்றில் பதிவாகும் வகையில் அரச ஊழியர்களுக்கு பாரிய சம்பள அதிகரிப்பு
உதய ஆர். செனவிரத்ன குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு அரசாங்க ஊழியர்களின் பாரிய சம்பள அதிகரிப்பை உள்ளடக்கியதாக 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட ஆவணம் திறைசேரியால் தயாரிக்கப்பட்டுவருவதாக போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
வரலாற்றில் பதிவாகும் வகையில் பாரியளவில் இந்த சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பொரலஸ்கமுவ பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பாரிய சம்பள அதிகரிப்பு
மேலும், இந்த அரச ஊழியர்களின் இந்த பாரிய சம்பள அதிகரிப்புக்கு ஒதுக்கப்பட்ட தொகை தொடர்பான தரவுகளை அடுத்த மாதம் அச்சிடப்பட்டு வெளியிடப்படவுள்ள வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டு ஆவணத்தில் காண முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
எனவே அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அரசியல் வாக்குறுதி தேர்தல் விஞ்ஞாபனங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை உடனடியாக வாபஸ் பெறுமாறு எதிர்க்கட்சிகளிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 12 மணி நேரம் முன்

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam

முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam
