அரச ஊழியர்களுள் ஒரு சாராருக்கு அதிகரிக்கப்பட்டுள்ள கொடுப்பனவு
கிராம அலுவலர்களுக்கான கொடுப்பனவை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதிகரிக்கப்பட்டுள்ள கொடுப்பனவு
கிராம அலுவலர்களுக்கு வழங்கப்படும் அலுவலக கொடுப்பனவுகள் மற்றும் எழுதுபொருள் கொடுப்பனவுகள் இவ்வாறு கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான சுற்றறிக்கை அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரினால் அனைத்து மாவட்ட செயலாளர்கள், மாவட்ட அரசாங்க அதிபர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.
இதன்படி மாநகர சபை மற்றும் மாநகர சபை எல்லைக்குள் மாதாந்த அலுவலக கொடுப்பனவு 3000 ரூபாவாகவும் உள்ளூராட்சி சபைகளின் எல்லைக்குள் மாதாந்த அலுவலக கொடுப்பனவு 2000 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
வருடாந்த எழுதுபொருள் கொடுப்பனவும் 3,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |