அடுத்த ஆண்டு அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம்! அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு
2023 ஆம் ஆண்டிற்கு, அரசாங்க ஊழியர்களின் சம்பளத்திற்காக ரூ.1,002 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எடுத்துள்ள கொள்கை முடிவுகளுக்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பூரண ஆதரவை வழங்க வேண்டும்.
2023 ஆம் ஆண்டிற்கு, அரசாங்க ஊழியர்களின் சம்பளத்திற்காக ரூ.1,002 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. கடன்களுக்கான வட்டியாக ரூ.2,193 பில்லியன் உள்ளது. இவற்றையெல்லாம் நீங்கள் எடுத்துக் கொண்டாலும், எங்களால் இந்த நாட்டை நடத்த முடியாது.
மக்களுக்கு தெரியாத உண்மை
1990 வரை, இலங்கை அரசாங்கத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20 சதவீதத்துக்கும் மேல் பெறப்பட்டது.
சில நடைமுறை ஆலோசனைகள் நாட்டுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தாலும், அமைச்சரால் நடைமுறைப்படுத்த முடியாத நேரங்களும் உண்டு.
ஒரு அமைச்சரால் எதையும் செய்ய முடியும் என நாங்கள் நினைக்கிறோம். ஆனால் அது சாத்தியமில்லை. நான் வர்த்தக அமைச்சராக இருந்தபோது சீனி வரி 25 சதத்தால் குறைக்கப்பட்டதை செய்தி மூலம் அறிந்தேன். அதற்கு நான் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தேன். அப்போது ஜனாதிபதியின் ஆலோசகர்கள் இந்த வரியை மாற்ற விரும்பவில்லை.
அமைச்சரவையால் எதுவும் செய்ய முடியாது. இதை புரிந்து கொள்ள வேண்டும். இந்த உண்மை மக்களுக்குத் தெரியாது. வருடாந்தம், நான் புத்தகங்களை எழுதி, நமது நாட்டின் பொருளாதாரத்தின் தலைவிதியைப் பற்றி தொடர்ந்து பேசினேன் என குறிப்பிட்டுள்ளார்.