அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்
அடுத்த வருடத்தில் அரச ஊழியர்களுக்கு சில கொடுப்பனவுகளை வழங்க முடியும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதனை அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் நிலவும் பிரச்சினைகள் அடுத்த ஆண்டு இறுதி காலாண்டில் தீர்க்கப்படும் என்று நம்புகிறோம் எனவும் அவர் கூறினார்.
பிரச்சினைகளுக்கு தீர்வு
அப்போது சில கொடுப்பனவுகளை வழங்கி அரச உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.
தற்போதிருக்கும் நெருக்கடியான சந்தர்ப்பத்தில், இந்த தருணத்தில் இதை விட சிறப்பாக யாராலும் செய்ய முடியும் என்று நான் நினைக்கவில்லை.
இவ்வாறான பின்னணியில் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தைவிட சிறந்த வரவுசெலவுத்திட்டத்தை எவராலும் தயாரிக்க முடியும் என நான் கருதவில்லை எனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


மீண்டும் பதின்மூன்றா....! 1 நாள் முன்

இயக்குனர் அட்லீயின் அம்மா, அப்பாவை பார்த்துள்ளீர்களா?- பிரபலத்துடன் அவர்கள் எடுத்த ஸ்பெஷல் போட்டோ Cineulagam

பிரான்ஸ் உணவகங்களில் பீட்சா தயாரித்துவந்த நபர் கைது: தெரியவந்துள்ள அதிரவைக்கும் பின்னணி News Lankasri
