அரச ஊழியர்களுக்கான சலுகை தொடர்பில் வெளியான அறிவிப்பு! அரசாங்கம் எடுத்துள்ள முடிவு

Ranil Wickremesinghe Government Employee Sri Lanka Government Sri Lanka Budget 2023
By Benat Nov 22, 2022 01:20 AM GMT
Report

2023ஆம் ஆண்டில் அரச ஊழியர்களுக்கு எந்த விதமான சலுகைகளும் கிடைக்காது என்று ஜனாதிபதி தெளிவாகவே கூறியிருக்கிறார் என்று யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அகிலன் கதிர்காமர் தெரிவித்துள்ளார். 

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.  

நெருக்கடி நிலையில் முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் 

அரச ஊழியர்களுக்கான சலுகை தொடர்பில் வெளியான அறிவிப்பு! அரசாங்கம் எடுத்துள்ள முடிவு | Government Employee Government Staffs Sri Lanka

அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அது குறித்து தொடர்ந்தும் விபரித்துள்ள விரிவுரையாளர் அகிலன் கதிர்காமர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், 

இந்த வரவு செலவுத் திட்டம்  ஒரு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் கொண்டுவரப்பட்டிருக்கிறது. சுதந்திரம் கிடைத்த வரலாற்றிலேயே ஒரு மிக மோசமான நிலைமை மற்றும் சுமார் நூறு வருடங்களுக்கு ஒருமுறை வருகின்ற ஒரு நெருக்கடி நிலைமையில் முன்வைக்கப்பட்டிருக்கிறது.

இந்த வருடம் எமது மொத்த தேசிய உற்பத்தி கிட்டத்தட்ட 10 வீதத்தால் சுருங்கப்போகிறது. இந்நிலையில் இந்த வரவு செலவுத் திட்டம்  பொருளாதார நெருக்கடியை சீர் செய்யுமா என்பது தொடர்பான ஒரு எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ஆனால் இந்த வரவு செலவுத் திட்டத்தில் பாரிய பொருளாதார நெருக்கடிக்கான தீர்வுகள் இல்லை என்றுதான் கூறவேண்டும்.

எனவே 2023ஆம் வருடத்திலும் ஒரு நெருக்கடி நிலைமையே நாட்டில் காணப்படும். என்னைப் பொறுத்தவரையில் பொருளாதார நெருக்கடி அடுத்த வருடத்தில் இதனை விட அதிகரிக்கும் என்பதே மதிப்பீடாக இருக்கிறது.

எமது மொத்த தேசிய உற்பத்தி 8 வீதத்தால் உயரவேண்டும் என்பதே ஜனாதிபதியின் அறிவிப்பாகவும் இருக்கிறது. நாட்டில் சனத்தொகை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே மக்களின் தேவைகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. அதனால் மொத்த தேசிய உற்பத்தி 5 விதத்திலாவது அதிகரிக்க வேண்டும்.

ஒரு சிக்கனமான வரவு செலவுத் திட்டம் 

அரச ஊழியர்களுக்கான சலுகை தொடர்பில் வெளியான அறிவிப்பு! அரசாங்கம் எடுத்துள்ள முடிவு | Government Employee Government Staffs Sri Lanka

இங்கு அதற்கு மாறாக சுருங்கும் என்று கூறும்போது அது பெரும் பாதிப்பை பொருளாதார ரீதியில் நாட்டுக்கு ஏற்படுத்தும். ஒருவேளை அடுத்த வருடம் நடுப்பகுதியில் மற்றுமொரு வரவு செலவுத்திட்டத்தை கொண்டு வரும் நிலைகூட ஏற்படலாம்.   

இந்த வரவு செலவுத் திட்டத்தில்  காணப்படுகின்ற வருமானம் செலவினங்கள் மற்றும் ஏனைய விடயங்களை பார்க்கும்போது அது தெரிகிறது. சர்வதேச நாணய நிதியம் இரண்டு விடயங்களை முன்வைத்து இருக்கிறது.

அதாவது கடன் மீள்செலுத்துவதற்கான திட்டங்களை உருவாக்க வேண்டிய தேவை முன்வைக்கப்பட்டிருக்கிறது. அடுத்ததாக 2025 ஆம் ஆண்டு இலங்கையின் வரவு - செலவுத் திட்டத்தில் செலவானது வரவைவிட குறைவாக இருக்க வேண்டும் என்ற விடயம் முன்வைக்கப்பட்டுள்ளது. இதன்படி இதனை ஒரு சிக்கனமான வரவு செலவுத் திட்டமாக கூற முடியும். 

குறிப்பாக, அரச ஊழியர்களுக்கு எவ்வித சலுகையும் இல்லை என்று கூட ஜனாதிபதி அறிவித்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US