அரச அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள பணிப்புரை
நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளை திட்டமிடும் போது, அது தொடர்பில் மாவட்ட அபிவிருத்திக் குழு மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழு என்பவற்றுக்கு அறிவிக்குமாறு அரச அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
அரச அதிகாரிகளுக்கான அறிவித்தல்
அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஆகியோருக்கு கடிதம் மூலம், ஜனாதிபதியின் செயலாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கைகளின்போது, அரச அதிகாரிகளுக்கும் அரசியல் பிரதிநிதிக்கும் இடையில் முறையான ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் நோக்கில் ஜனாதிபதியின் செயலாளர் இந்த பணிப்புரைகளை வழங்கியுள்ளார்.
இனிமேல், அரச மற்றும் அரை அரச நிறுவனங்கள் மூலம் மாவட்ட மட்டத்திலோ அல்லது பிரதேச மட்டத்திலோ அபிவிருத்தி நடவடிக்கைகளை திட்டமிடும்போதும், செயல்படுத்தும் போதும், மாவட்ட அபிவிருத்திக் குழு மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழுக்களுக்கு அது குறித்து அறிவித்து, அவர்களின் ஒத்துழைப்புடனும் ஒருங்கிணைப்புடனும் செயல்படுமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, தனது கடிதத்தில் அரச அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ஆரம்பமாகிய சூர்ய பெயர்ச்சி... பிறந்தது மார்கழி மாதம்! அதிர்ஷ்டத்தை தட்டித்தூக்கும் 6 ராசிகள் Manithan
கொத்தாக 15 பேர்களைப் பலி வாங்கிய தந்தையும் மகனும்: கடுமையான முடிவெடுக்கும் அவுஸ்திரேலியா News Lankasri