இலங்கையில் LGBTQ சுற்றுலாவுக்கு அரசாங்கம் உடன்பாடில்லை
இலங்கையில் சமபாலீர்ப்பு சுற்றுலாவுக்கு ஆதரவாக விளம்பரம் செய்வது குறித்த சர்ச்சை எழுந்துள்ள நிலையில், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA) தலைவர் அரசியல் தலைமையைக் கலந்தாலோசிக்காமல் இது தொடர்பான கடிதத்தை வெளியிட்டுள்ளார் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தலைவர் வெளியிட்ட குறித்த கடிதம் தொடர்பாக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து நேற்றையதினம்(8) நாடாளுமன்றில் கவிந்த ஜயவர்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, குறித்த விடயம் தொடர்பில் தொடர்புடைய அமைச்சர், அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் கொள்கை குறித்து சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தலைவருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக அவர் கூறினார்.
அரசியல் இலாபம்
இந்த விவகாரம் தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாடு, எந்தவொரு குறிப்பிட்ட குழுவிற்கும் அரசாங்கம் ஆதரவளிக்கவோ அல்லது விசேட சலுகைகளை வழங்கவோ இல்லை என்பதாகும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
இறுதியாக, உணர்வுப்பூர்வமான பிரச்சினைகளை அரசியல் இலாபத்திற்காகப் பயன்படுத்தக்கூடாது என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 5 நாட்கள் முன்

எதர்சையாக சீதா-மீனாவிற்கு தெரியவந்த அருண் பற்றிய உண்மை, முத்து தான் செய்தாரா?... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
