தேர்தலை பிற்போட அரசாங்கம் சதி : சுமந்திரன் குற்றச்சாட்டு
தேர்தலை பிற்போட அரசாங்கம் சதி செய்கிறது என தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
வவுனியாவில் இன்று (15) இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு கூட்டத்தின் பின் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மத்திய செயற்குழு
மேலும் தெரிவிக்கையில், “தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவும், கட்சி சம்மந்தமான வழக்கில் சம்மந்தப்பட்ட தரப்பினரும் ஒன்றாக கூடி, அடுத்த தவணை 19 ஆம் திகதி வரவிருக்கின்ற வழக்கு குறித்து கலந்துரையாடப்பட்டது.
நாங்கள் ஒவ்வொருவரும் எமது நிலைப்பாட்டுக்கு அமைய மறுமொழிகளை தாக்கல் செய்த பிறகு வழக்கை முடிவுறுத்துவதற்கான ஒரு யோசனை அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
அந்த யோசனையின் விபரங்கள் நாங்கள் மத்திய செயற்குழுவில் கூடி தீர்மானிப்போம். ஆனால் பொதுவாக வழக்கை எந்த அடிப்படையில் முடிவுறுத்தலாம் என இணங்கப்பட்டிருக்கிறது. முன்னேற்றகரமான செயற்பாடு கலந்துரையாடலில் இடம்பெற்றது.
இந்நிலையில், 8 எதிராளிகளையும் 19 ஆம் திகதி வழக்கிற்கு அழைப்பார்கள்.
கட்சியினுடைய சின்னம்
கடைசியாக இடையீட்டு மனுவை முன்வைத்த ஜீவராஜா என்பவருடைய மனு தொடர்பான விடயமும் 19 ஆம் திகதி இருக்கிறது. அதனால் வழக்கு தள்ளிப் போகக் கூடிய சில சந்தர்ப்பங்கள் ஏற்படலாம்.
அத்தோடு, வழக்குகள் நீதிமன்றத்தில் இருப்பதன் காரணத்தினால் தமிழரசுக் கட்சி செயற்பட முடியாமல் இருக்கிறது.நீதிமன்றத்தில் முடங்கிக் கிடக்கிறது. கட்சியினுடைய சின்னத்தை பாவிக்க முடியாமல் இருக்கிறது.
தேர்தல் வந்தால் என்ன செய்வார்கள். என்றெல்லாம் பலர் நீலிக்கண்ணீர் வடிக்கின்ற விடயம் நடந்து கொண்டிருகிறது.
இதனை தெளிவுபடுத்த வேண்டிய தேவை இருக்கிறது. இதனை ஊடகங்கள் மூலம் தெளிவுபடுத்துமாறும் என்னை பணித்தும் இருக்கிறார்கள். கட்சி முடக்கபட்படவில்லை. கட்சியினுடைய செயற்பாடுகள் எதுவும் முடங்கவில்லை. கட்சியின் சின்னம் முடக்கப்படவில்லை. கட்சி முழுமையாக செயற்பட்டுக் கொண்டே இருகிறது.
ஜனாதிபதி தேர்தல்
கட்சியின் சின்னத்தின் கீழ் எந்த தேர்தலையும் நாம் சந்திக்க முடியும். அதற்கு எந்தவிதமான இடர்பாடுகளும் கிடையாது. ஆகவே இதை தெரிந்து கொண்டே சிலர் வேண்டும் என்ற பிரசாரத்தை மேற்கொள்கிறார்கள். அதனால் தான் இந்த தெளிவுபடுத்தலை செய்கின்றோம்.
எதிர்வரும் எந்த தேர்தலில் கட்சி போட்டியிடும். மக்களுக்கான தனது செயற்பாட்டை தொடர்ந்தும் முன்னெடுக்கும். பாராளுமன்ற குழுதத் தலைவர் தொடர்பில் கலந்துரையாடப்படவில்லை. அது தொடர்பில் எமது கட்சியின் அரசியல் குழு இணைய வழி ஊடாக ஒரு தடவை கலந்துரையாடியது. மத்திய செயற்குழுவில் அது சம்மந்தமான தீர்மானம் எடுப்போம்.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மனுவை சட்டத்தரணி ஒருவர் தாக்கல் செய்யதுள்ளார். அது மூன்று நீதியரசர்கள் முன்பாக விசாரணைக்கு வருகிறது.
அரசாங்கம் தேர்தலை பிற்போட முனைப்பு காட்டுகிறது என்பதை அரசியலமைப்பில் 83 பி
என்கின்ற உறுப்புரையை மாற்றுவதற்கு அமைச்சரவை அனுமதி கொடுத்ததில் இருந்தே
தெரிகிறது. அதைப் பற்றி விளக்கமாகவும் விபரமாகவும் நாடாளுமன்றத்தில்
பேசியுள்ளேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

சேரனை தேடி அலையும் தம்பிகள், போலீஸ் நிலையத்தில் கதறி அழும் சோழன், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam

பிரச்சனை கிளப்ப நினைத்த ரோஹினியால் மீனாவிற்கு கிடைத்த பரிசு... சிறகடிக்க ஆசை சீரியல் சூப்பர் புரொமோ Cineulagam
