போர் குற்றச் செயல்கள் இடம்பெற்றதா என்பதை ஆராய நியமிக்கப்படவுள்ள ஆணைக்குழு
போர் குற்றச் செயல்கள் இடம்பெற்றதா என்பதனை ஆராய்வதற்காக அரசாங்கம் ஆணைக்குழு ஒன்றை நியமிக்கவுள்ளது.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவொன்றை நியமிப்பதற்கு இவ்வாறு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் 12ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 52வது அமர்வு ஆரம்பமாகவுள்ளது.
போர் குற்றச் செயல்கள்
இந்த அமர்வுகளுக்கு முன்னதாக போர் குற்றச் செயல்கள் தொடர்பிலான உண்மையை கண்டறியும் ஆணைக்குழு உருவாக்கப்படவுள்ளது.
உண்மையை கண்டறியும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் ஆணைக்குழு என இந்த ஆணைக்குழுவிற்கு பெயரிடப்படவுள்ளது.
குற்ற செயல்களுக்கு எதிராக வழக்கு
இந்த ஆணைக்குழுவிற்கு நிர்வாக அதிகாரத்துடன் போர்க் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படும் அதிகாரிகள் குறித்து பரிந்துரை செய்யும் அதிகாரம் காணப்படுகின்றது.
எனினும், போர் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக இந்த ஆணைக்குழுவால் வழக்கு தொடர முடியாது என குறிப்பிடப்படுகிறது.
மேலும், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஆகியோர் ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டில் உரையாற்றுவதுடன், இந்த உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட்டிற்கு அறிவிக்கவுள்ளதாக ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.