சீனாவிடம் மேலும் 300 மில்லியன் டொலர் கடன் பெறும் அரசாங்கம்
சீனாவிடமிருந்து மேலும் 300 மல்லியன் டொலரை அரசாங்கம் கடனாகப் பெற்றுக்கொள்ள உள்ளது.
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் செலாவணி பரிமாற்ற அடிப்படையில் இலங்கைக்கு கடன் வழங்க சீனா இணங்கியிருந்தது.
இந்த விடயம் தொடர்பில் அப்போதைய ராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் கடந்த மார்ச் மாதம் ஊடக சந்திபொன்றில் கூறியிருந்தார்.
சீனாவிடமிருந்து கடன் பெற்றுக் கொள்ளும் யோசனைக்கு கடந்த வாரம் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் இந்த கடன் தொகையை பெற்றுக்கொள்ள முடியும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை, ஓமான் மற்றும் இந்தியாவிடமிருந்தும் அரசாங்கம் கடன் பெற்றுக்கொள்வதற்கு முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அந்நிய செலாவணி கையிருப்பினை அதிகரித்து கொள்ளவும், எரிபொருள் கொள்வனவு செய்வதற்கும் இவ்வாறு கடன் பெற்றுக்கொள்ளப்பட உள்ளது.
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan