அரசின் அஸ்வெசும கொடுப்பனவின் எதிரொலி! வீதிக்கு இறங்கிய மக்கள்(Video)

Mullaitivu Sri Lankan protests President of Sri lanka Sri Lanka Government
By Keethan Jun 27, 2023 01:26 PM GMT
Report

அரசின் அஸ்வெசும கொடுப்பனவை வழங்குமாறு கோரி புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட கிராமங்களில் வசிக்கும் மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

இந்த போராட்டமானது இன்று (27.06.2023) முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார் கட்டு சமுர்த்தி வங்கிக்கு முன்னால்  முன்னெடுக்கப்பட்டுள்ளது.  

இதன்போது மூங்கிலாறு,உடையார்கட்டு குரவில் மற்றும் தேராவில் கிராமங்களை சேர்ந்த மக்கள் போரட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.


மனு கையளிப்பு

போராட்டத்தின் போது, ஏழைகள் வாழ்வை ஏழனம் செய்யாமல் எங்களை உள்வாங்கு,வேண்டும் வேணடும் அஸ்வெசும,அரசே அஸ்வெசும திட்டத்தில் அனைவரையும் உள்வாங்கு,ஜனாதிபதியே தகுதியான எங்களையும் உள்வாங்கு என்று பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு கவனயீர்ப்பினை மேற்கொண்டுள்ளனர்.


கவனயீர்ப்பினை தொடர்ந்து, கிராம மட்ட அமைப்புக்களை சேர்ந்தவர்கள் சிலர், புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் சென்று அங்கு பிரதேச செயலாளர் எஸ்.ஜெயகாந்திடமும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு வருகை தந்த முல்லைத்தீவு மாவட்ட பதில் அரசாங்க அதிபர் க.கனஸே்வரனிடமும் மக்களின் கோரிக்கை அடங்கிய மனுவினை கையளித்துள்ளனர்.

மட்டக்களப்பு

மட்டக்களப்பில் அரசாங்கத்தின் நலன்புரித் உதவித் திட்ட பதிவுகளில் முறைகேடு ஏற்படுவதை எதிர்த்து ஓட்டமாவடி- கொழும்பு வீதியில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பிரதேச செயலகம் கோறளைப்பற்று மத்தி முன் பிறைந்துறைச்சேனை 204 ஏ பிரிவு சமூர்த்தி பயனாளிகளால் ஆர்பாட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அரசின் அஸ்வெசும கொடுப்பனவின் எதிரொலி! வீதிக்கு இறங்கிய மக்கள்(Video) | Government Aswesuma Allowance Include People

ஒன்று கூடிய மக்கள் வாசகங்கள் எழுதிய பதாதைகளை கையில் ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் ஊர்வலமாக ஓட்டமாவடி, கொழும்பு பிரதான வீதி வழியாக பிரதேச செயலகம் வரை நடந்து சென்றனர்.

அதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் கோரிக்கை அடங்கிய மகஜரை செயலக திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.றுவைஸ் பெற்றுக்கொண்டார்.

அரசின் அஸ்வெசும கொடுப்பனவின் எதிரொலி! வீதிக்கு இறங்கிய மக்கள்(Video) | Government Aswesuma Allowance Include People

இதனையடுத்து கொடுப்பனவு கிடைக்கதாவர்கள் மேன்முறையீடு செய்யலாம் என்றும் மேன் முறையீடு செய்வதற்காக அலுவலகத்தில் சகல வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்ததுடன் உடனடியாக விண்ணப்பங்களை சமர்பிப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தி-நவோஜ்

செங்கலடி 

அஸ்வெசும" சமூக நலன்புரி திட்டத்தின் கீழ் தம்மை உள்வாங்க கோரி செங்கலடி பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செங்கலடி பிரதான வீதியில் இருந்து செங்கலடி பிரதேச செயலகம் வரை பேரணியாக கையில் பதாதைகளை ஏந்தியவாறு பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசின் அஸ்வெசும கொடுப்பனவின் எதிரொலி! வீதிக்கு இறங்கிய மக்கள்(Video) | Government Aswesuma Allowance Include People

"அஸ்வெசும" சமூக நலன்புரி திட்டத்தின் கீழ் தம்மை உள்வாங்க கோரியும் முறையற்ற பட்டியல் தயாரிப்பை மீள் பரிசீலனை செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.

இறுதியாக வருகை தந்த செங்கலடி பிரதேச செயலகத்தின் உதவிபிரதேச செயலாளர் நிருத்தா பிருந்தனிடம் தமது பிரச்சினைகளை தெரிவித்துள்ளனர்.

அரசின் அஸ்வெசும கொடுப்பனவின் எதிரொலி! வீதிக்கு இறங்கிய மக்கள்(Video) | Government Aswesuma Allowance Include People

அரசின் அஸ்வெசும கொடுப்பனவின் எதிரொலி! வீதிக்கு இறங்கிய மக்கள்(Video) | Government Aswesuma Allowance Include People

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW 



6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US