தேர்தலை நடத்த போதியளவு பணமில்லை! அரசாங்கம்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு போதியளவு பணமில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன இந்த விடயத்தை சற்று முன்னர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் நடத்துவதற்கு போதியளவு பணம் உண்டா என தாம், நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவிடம் கேட்டதாகவும், அதற்கு போதியளவு பணமில்லை என பதிலளித்தார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
உயர் நீதிமன்றத்திற்கு அறிவிப்பு
இந்த நிலைமை குறித்து உயர் நீதிமன்றத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, நிதி இல்லாத காரணத்தினால் வேட்பு மனுக்களை அச்சிட முடியவில்லை என அரச அச்சகத் திணைக்களம் அறிவித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

பல்லவனை தள்ளிவிட்டு கொச்சையாக பேசிய வானதி அண்ணன்... அய்யனார் துணை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
